
எங்கள் வீட்டில் உடைகளை காயப் போட்டால் கருங்குருவிகள் அதில் கூடு கட்டி விடுகின்றன. இதனை பார்த்த என் தங்கை அவற்றை பிரிக்க மனமில்லாமல் தன் மகனின் உடையில் ஒன்றை அப்படியோ விட்டுவிட்டார். இப்பொழுது அதில் குருவியாரும் கூடுகட்டி குடித்தனமும் நடாத்தி குஞ்சும் பொரித்து விட்டார். எனக்கு இச்செயலைப் பார்த்தவுடன் "முல்லைக்கு தேர் கொடுத்த பாரி"யின் கதை தான் ஞாபகம் வந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக