Exam

சனி, 11 அக்டோபர், 2008

இந்து சமயத்தினரை வேதனைப்படுத்தாதீர்

சற்று முன்னர் தான் விஜய் தொலைக்காட்சியில் “ஜோடி நொம்பர் 1-சீசன் 3” பார்த்தேன். அதில் ஒரு ஜோடியினர் கிருஸ்ணர் வேடமிட்டு ஆடிய நிகழ்வை பார்த்த போது சற்று அதிர்ந்து தான் போனேன். என்ன இந்துசமயத்தின் கடவுகள் இவர்களுக்கு கேலிப் பொருட்களா? நான் கேட்கின்றேன் இவர்களால் மற்ற மதங்களின் கடவுள்களை இவ்வாறு கேலிப்பொருட்களாக ஆக்க இயலுமா என்று? இன்றைய திரைப்படங்களிலும், நாடகங்களிலும் ஏன் இந்து மதக்கடவுள்களையே கோமாளிகளாக காட்டும் நிலை உள்ளது. இது இந்த சமயத்தில் உள்ள சமயப்பெரியவர்கள் என்றுச் சொல்லிக்கொள்பவர்கள் பேசா மடந்தைகளாக இருப்பதாலா? அல்லது இந்த மதத்தினரின் பொறுமையை இவ்வாறு கேலிக்குள்ளாக்குபவர்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கின்றார்களா? இதில் என்ன வேதனை என்றால் இவ்வாறு கேலிக்குள்ளாக்குபவர்கள் வேறு யாருமல்ல இந்து மதத்தைச் சார்ந்தவர்களே!

“நபிகள் நாயகத்தின்” திருவுருவப்படத்தை கேலிக்குரியதாக்கியதற்கு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய சகோதர்களின் எதிர்ப்பை அவ்வாறு ஆக்கியவர்கள் சந்தித்தனர். கிறித்துவமதத்தை பற்றி எழுதிய சாலமன் ருஸ்டியின் நிலையை யாவரும் அறிந்ததே. ஆனால் தொன்மையான இந்து மதத்தின் கடவுள்களை இந்தத் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் கேலிக்குரியதாக்குவது பற்றி அதன் தலைவர்கள் மௌனம் காப்பது ஏன்? அவர்களுக்கு இதைவிட வேறு முக்கிய வேலைகள் ஏதும் உள்ளனவோ? மற்ற மதத்தினர் போல உலகம் தழுவிய, நாடு தழுவிய போரட்டங்களை நடாத்தத் தேவையில்லை. ஆகக்குறைந்தது ஒரு கண்டன அறிக்கையையாவது அவர்கள் வெளியிடலாம் தானே! வேறு எந்த மதத்திலும் உள்ளவர்கள் தங்கள் மதத்தைப்பற்றி வெளியாரிடம் குறை கூறுவதில்லை நம் இந்துக்களைத் தவிர, அதிலும் குறிப்பாக தமிழர்கள் தான் இவ்வாறு உள்ளோம்.

இனி வரும் காலங்களில் ஆவது நாம் நமது மதத்தை பெருமைப் படு்த்தாவிட்டாலும் பரவாயில்லை, சிறுமைப்படுத்தக் கூடிய பிறர் பார்த்து கேலியாய் சிரிக்கும் அளவிற்கு சித்தரிக்காமல் இருந்தாலே போதும்.
செய்வார்களா???????????????????????????????????????????

8 கருத்துகள்:

Nimal சொன்னது…

நீங்கள் சொல்லும் 'இந்துசமயத்தின் கடவுகள்' இறைவனை உருவகப்படுத்தும் ஒரு வடிவமே.

இறைவனை உணராது, இறைவனின் வடிவத்தை மட்டும் உணர்பவர்களுக்கே இது இத்தகைய பாரிய பிரச்சனையாக தெரிகிறது.

எப்போது எம்மால் இறைவனை உணரமுடிகிறதோ அப்போது உருவம் தேவையற்றதாகிறது.

//இதில் என்ன வேதனை என்றால் இவ்வாறு கேலிக்குள்ளாக்குபவர்கள் வேறு யாருமல்ல இந்து மதத்தைச் சார்ந்தவர்களே!//
அவர்களை இந்துக்கள் என்றால் அவர்களுக்கு தமது கடவுளின் வேசம் அணிய உரிமை இல்லையா? அது தவறு என்றால் அவ்வாறானவர்களை மதத்தை விட்டு விலக்க விதிமுறைகளை உருவாக்க வேண்டியது தான்.

//வேறு எந்த மதத்திலும் உள்ளவர்கள் தங்கள் மதத்தைப்பற்றி வெளியாரிடம் குறை கூறுவதில்லை நம் இந்துக்களைத் தவிர, அதிலும் குறிப்பாக தமிழர்கள் தான் இவ்வாறு உள்ளோம்.//
இல்லாததையா கூறுகிறார்கள். இந்து மதம் இன்றைய நடைமுறையில் பல குறைபாடுகளுடன் தானே இருக்கிறது.

பிற மதத்தினர் குறை கூறுவது இல்லை என்றில்லை. நோன்பு குறித்தும், வேறு சடங்குகள் குறித்தும் குறைபாடுகள் கதைக்கும் பல இசுலாமியர்கள் உள்ளனர். நீங்கள் சந்திக்காதிருப்பதால் இல்லை என்றில்லை தானே.

பெயரில்லா சொன்னது…

தம்பி நிமல் ஆசிரியர் எழுதியிருப்பதை சற்று அவதானமாக வாசியும். அவர் இதில் கூறியிருப்பது இந்துமதமட்டுமல்ல எந்த மதக்கடவுள்களின் திருவுருவங்களையும் கேலியாக கேலிப்பொருட்களாக ஆக்கிவிடாதீர்கள் என்பது பற்றியே தவிர யாரையும் வேசம் போட வேண்டாம் என்று சொல்லவில்லையே. முதலில் எதையும் முழுமையாக வாசித்து அதன் பொருள் உணர்ந்து எழுதும். நமக்கு என்ன உரிமை இருக்கின்றது ஒரு மதத்தின் கடவுள்களை கேலியாக சித்தரிப்பதற்கு. எங்கே வேறு ஒரு மதத்தின் உருவங்களையோ கொள்கைகளையோ வெளிப்படையாக இவ்வாறு திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் விசர்சித்துப் பாருங்களேன் வெட்டிப்போடுவார்கள்.

Nimal சொன்னது…

//யாரையும் வேசம் போட வேண்டாம் என்று சொல்லவில்லையே. //

நான் வாசித்ததன்படி "அதில் ஒரு ஜோடியினர் கிருஸ்ணர் வேடமிட்டு ஆடிய நிகழ்வை பார்த்த போது சற்று அதிர்ந்து தான் போனேன்." என்று தான் எழுதப்பட்டுள்ளது. ஆதலால் தான் நான் வேசம் போடுவதை பற்றி என்று பொருள் கொள்ள நேர்ந்தது.

//நமக்கு என்ன உரிமை இருக்கின்றது ஒரு மதத்தின் கடவுள்களை கேலியாக சித்தரிப்பதற்கு. //

வேசம் போடுவதால் கேலியாக சித்தரிக்கப்படுவது என்பது எவ்வாறு சரியாகும் என்பதுவும் எனக்கு விழங்கவில்லை.

தமிழன் என்பதையே பெயராக கொண்டதால் உங்களின் தமிழறிவு மிக அதிகம் என நினைக்கிறேன். எனவே நான் தவறாக பொருள் கொண்டிருந்தால் சரியான பொருளை எனக்கு விளக்கவும்.

S.Lankeswaran சொன்னது…

என் இனிய சகோதரர்களே நிமல் மற்றும் தமிழன் என்னப்பா இது. நான் எனது ஆதங்கத்தை தானே எனது பதிவில் போட்டுள்ளேன். நீங்கள் இருவரும் ஏன் தர்க்கப்பட்டுக் கொள்கின்றீரகள்.

சகோதரர் நிமல் அவர்களே! கடவுளைப் போன்று வேசம் போடுவதில் தவறு இல்லை. நான் வேசம் போடுவதே தவறு என்று சொல்லவும் இல்லை. அன்று விஜய் தொலைக்காட்சியில் ஒலி ஒளிப்பரப்பாகிய நிகழ்வில் கிருஸ்ணரை ஒரு கேலிக்குரியவராகவே சித்தரித்தார்கள் என்பதே என் வாதம் அவ்வளவே. கடவுளரைப் போல் வேசமிடுவதே தவறு என்றால் இன்ற எந்த பக்திப்படங்களும் வெளியிடப்பட்டிருக்காது அவ்வளவுதான்.

Nimal சொன்னது…

மன்னிக்கவும் இலங்கேஸ்வரன்.
உங்களுடைய பதிவில் தேவையில்லாமல் தர்க்கப்பட்டதாக உணர்ந்தால்.

நன்றி.

ம.கஜதீபன் சொன்னது…

எனக்கு என்னவோ நிமல் சொல்வது சரி என்றுதான் படுகின்றது. கடவுளுக்கு உருவமளித்தவர்கள் ஓவியர்களே! கடவுள் என்ற சக்தி ஒன்று என்று எல்லோரும் உணரும் வரையில் இத்தகைய பிரச்சனைகள் வந்து கொண்டுதான் இருக்கும். முதலில் அனைவரும் கடவுள் பற்றிய ஒரு தெளிவான நிலைக்கு வரவேண்டும். மனிதன் தன்னால் கட்டுப்படுத்த முடியாத ஒரு விடயத்தினை "கடவுள்" என்று பயத்தினால் பெயரிட்டு அதற்கொரு உருவம் கொடுத்துள்ளான். ஆக கடவுள் என்ற "சக்தி" அருவுருவம் அணு இப்படி எவ்வாறு வேண்டுமென்றாலும் கூறலாம். இந்த சக்தியை பற்றி ஒரு தெளிவு எம்மிடத்தில் இருந்தால் இத்தகைய பிரச்சனைகள் மற்றும் ஆதங்கங்களிற்கு இடமிருக்காது என்பது என் கருத்து.....இந்துமத வேடங்கள் மற்றும் அவதாரங்களின் தோற்ற நோக்கமே இந்துமத குலத்தினை ஒரு கட்டுக்கோப்பாக கொண்டுசெலுத்தவேண்டும் என்பதாற்காக ஆக்கப்பட்டன அல்லது சிருஸ்டிக்கப்பட்டன என்று கூறலாம். கட்டுக்கோப்பில்லாமையினால் இந்தியாவில் முற்காலத்திலிருந்த பொளத்த இனம் பாரிய அளவில் அழிவுகண்டது என்று ஒரு புத்தகத்தில் படித்த ஞாபகம். ஆகவே இவ்வகையான அழிவுகளிலிருந்து நம்மதத்தினை காக்கவே என்பது நான் படித்த மட்டில் அறிந்தது.எனது அறிவுக்கு எட்டிய மட்டும் எனது கருத்துரை இதுதான் நண்பர்களே..!!!!

S.Lankeswaran சொன்னது…

தம்பி கஜதீபன் நிமல் சொல்வது சரிதான் கடவுள் உருவம் அற்றவர். அதை மறுத்து நான் ஒன்றும் பதிவு வெளியிடவில்லையே. எனது வாதம் என்னவென்றால் சமய வழிபாடுகளாக உள்ள மத சின்னங்களையோ அல்லது கடவுள் ஒருவங்களையோ தயவு செய்து கேலியாக திரைப்படங்களிலோ அல்லது தொலைகாட்சியிலோ சித்தரிக்காதீர்கள் என்பதே. அவ்வளவுதான்.... விளங்கிக் கொள்ளுங்கள் .

வந்தியத்தேவன் சொன்னது…

நானும் அதனைப் பார்த்தேன். கிருஷ்ணராக வேசமிடத்திலோ ஆடியதிலோ(பரதம்) தவறில்லை ஆனால் கிடுஷ்ணர் சப்பாத்து அணிந்து ஆடியதும் குத்துப்பாட்டிற்க்கு ஆடியதும் இமாலயத் தவறு. இதனை கமல் செய்திருந்தால் இந்து அமைப்புகள் கொதித்து எழுந்திருக்கும் ஏனென்றால் ஜோடி நம்பர் ஒன்னில் ஆடியவர்கள் சாதாரணமானவர் இந்து அமைப்புகளுக்கு பிரபலங்களுக்கு எதிராகத் தான் போர்கொடி தூக்கமுடியும்.

நாம் எப்படிக் கத்தினாலும் இவர்கள் திருந்தமாட்டார்கள்.