வவுனியா சமளன்குளத்தில் அமைந்துள்ள கல்லுமலைப்பிள்ளையார் கோவில் (நான் பிறந்த இடம் என்ற பெருமை எனக்குண்டு அது மட்டுமல்ல எனது தந்தையாரால் உருவாக்கப்பட்ட ஆலயங்களுள் இதுவும் ஒன்று)
இன்று தொல்பொருள் ஆராய்ச்சித் தினைக்களத்தின் வசம் உள்ளது.அப்பாடா நிழற்படம் எடுத்து களைச்சிப் போயிட்டன் கொஞ்சம் பொறுங்க... ஓய்வெடுத்திட்டு வாரன்... (என்னதான் elephant house, Gar gills Ice creamங்கள் இருந்தாலும் இந்த சைக்கிள்காரர் விற்கிற 15 ரூபா Ice பழத்திற்கு நிகராகுமா?)
வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் அமைந்துள்ள எழில் மிகு சிறு குன்றில் வீற்றிருக்கும் முருகன் ஆலயத்தின் தோற்றம் இது. இந்த ஆலயம் பற்றி வவுனியா வாழ் மக்கள் பலருக்கே தெரியாது. தற்போது பிரபல்யமாகி வரும் ஒன்று. எங்கே இயற்கை சூழலையும் இதன் அமைதியையும் கெடுத்து விடுவார்களோ என்ற அச்சம் எனக்குண்டு. இதற்கு அருகில் கல்வாரி மலை அமைந்துள்ளது. அடுத்த பதிவுகளில் அதன் எழில்மிகு தோற்றத்தை வெளியிடுகின்றேன்.
4 கருத்துகள்:
படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி -
//(என்னதான் elephant house, Gar gills Ice creamங்கள் இருந்தாலும் இந்த சைக்கிள்காரர் விற்கிற 15 ரூபா Ice பழத்திற்கு நிகராகுமா?)//
என்னது பதினஞ்சு ரூபாயா 5 ரூபாதானே வித்திச்சு
அது ஒரு காலம்... இன்று உப்பு கூட ஒரு கிலோ ரூபா 60ஆம்.
நான் பிறந்த மண்ணின் எழிழ்மிகு இடங்களை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே... இது ஒரு புறமிருக்க உங்களுடய இந்த முயற்சிக்கு இதயம்கனிந்த வாழ்த்துக்கள்.. vavuniyatamil.blogspot.com/ மிகப்பெரிய இணையமாக உருவெடுக்க வேண்டும்...
கருத்துரையிடுக