Exam

ஞாயிறு, 16 நவம்பர், 2008

என் ஸ்கூட்டியின் புலம்பல்

என் அன்பிற்கினிய உரிமையாளராகிய திருவாளர் ச.இலங்கேஸ்வரன் அவர்களுக்கு முதற்கண் வணக்கம். நான் உங்கள் ஸ்கூட்டி உந்துருளி கதைக்கின்றேன். இன்று எனது ஆதங்கத்தை உங்களிடம் கொட்டித்தீர்க்க வேண்டும் என்ற ஆவலில் எழுதுகின்றேன்.

என்னை நீங்கள் வாங்கி இன்றுடன் ஓராண்டுகள் நிறைவடைகின்றது. உங்களின் கடுமையான ஓட்டத்திற்கு தாக்குப்பிடித்து இந்த ஓர் ஆண்டில் விபத்துக்கள் ஏதும் ஏற்படாமல் ஏன் சிறுகாயங்கள் கூட இன்றி என்னை நீங்கள் பாவித்ததே பெரிய விடயம் தான்.

ஆனால் கடந்த காலத்தில் உங்களிடம் இருந்த எனது உறவினர்கள் ஆகிய CD Downம் Hero honda Splander ம் பட்ட காயங்களையும் சோக வரலாறுகளையும் அவர்களை சாலையில் சந்திக்கும் போது நான் அறிவேன்.

அன்பானவரே! நான் மகளிர் பயனிப்பதற்கு ஏற்ற வகையிலே தயாரிக்கப்பட்டவன். நீங்கள் என்னை முரட்டுத்தனமாக கையாளும் போது எனக்கு வலிக்கத்தானே செய்கின்றது என்பதை தாங்கள் அறிவீர்களா? எனது மடியில் உங்களின் கணிணியை வைத்து நித்தம் கொண்டு செல்லும் போதும், எனது வயிற்றுக்குள் suntel CDM தொலைபேசியையும் வைத்து என்னை சுமைதாங்கி ஆக்கி விட்டீர்களே!

அது சரி உங்களுக்கு பாதையில் உள்ள மேடு பள்ளங்கள் தெரிவதில்லையா? 60 மைல் வேகத்தில் நீங்கள் செல்லும் போது எனது சொப்பட் சோபர்கள் படும் அவஸ்தையை நீங்கள் சற்று புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் படுத்தும் பாடு போதாதென்று உங்கள் கல்வி நிலையப் பெண்களுக்கும் கொடுத்து என்னை பாடாய்ப்படுத்துகின்றீர்கள். அந்தப் பேய்கள் பழகுவதற்கு நான் தானா கிடைத்தேன். அதிலும் அவர்கள் டபுல்ஸ் வேறு. உங்களுக்கு முன்பு அவர்கள் மெதுவாக என்னை செலுத்தி தங்கள் தலை மறைந்ததும் அவர்கள் என்னைப்படுத்தும் பாடு இருக்கின்றதே அப்பப்பா நீங்களே பராயில்லை தலைவா!

அன்பானவரே! இனிமேலாவது என்னை கொஞ்சம் துடையுங்கள். மென்மையாகக் கையாளுங்கள். நீங்கள் என்னை கையாளும் விதத்தில் தான், நான் உங்களுடன் அதிக காலம் வாழ்வேன் என்று கூறி விடைபெறுகின்றேன்.


தங்களின்
ஸ்கூட்டி பப் +

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நாள்தோறும் உங்களுக்கு உதவும் ஒரு `வாயில்லாத' வண்டியை இப்படிப் புலம்ப விடுவது நியாயமா? சிறிது இரக்கம் காட்டுங்கள்.

சோழர் தலைவன் சொன்னது…

"நீங்கள் படுத்தும் பாடு போதாதென்று உங்கள் கல்வி நிலையப் பெண்களுக்கும் கொடுத்து என்னை பாடாய்ப்படுத்துகின்றீர்கள். அந்தப் பேய்கள் பழகுவதற்கு நான் தானா கிடைத்தேன்."

உள்ளுக்குள்ளே நிறைய கோபம் இருக்கிறது போல

பெயரில்லா சொன்னது…

இது உங்களுக்கே ரொம்ப ஓவரா தெரியல???????????????????
நானும் உங்க ஊர்லதான் ஈ ஓட்டிடு இருக்கன். ஆனா உங்க கைல அந்த பைக் பட்ற பாட்ட பார்தது நான் அழாத நாளே இல்லீங்க. ஏங்க சும்மா அந்த ஒன்றுமே தெரியாக அப்பாவி பிள்ளைங்கள திட்டிரீங்க? அதுங“க கையில போற அந்த 10 நிமிசம்தான் பைக் சந்தோசமா இருக்கு. என்ன சரிதானே??????????????????????????????

S.Lankeswaran சொன்னது…

ஆம் சோழர் தலைவரே! இந்தமாதிரி சந்தர்ப்பங்களில் தானே போட்டு தாக்க முடியும்.

Tech Shankar சொன்னது…

//அன்பானவரே! இனிமேலாவது என்னை கொஞ்சம் துடையுங்கள்

அருமைங்க. கடைசியில் இவ்வளவு விசயம் இருக்கா?

Muniappan Pakkangal சொன்னது…

Your Scooty s,pulambal niyayamanathu,Pl try to make it happy.