தமிழே தன் மூச்சு என்று தனது தமிழ் பணியினை செம்மனே செய்யும் எனது நண்பரும், புதுச்சேரி பலகலைக்கழகத்தில் பேராசிரியராய் பணிபுரிபவருமாகிய முனைவர் திரு. மு.இளங்கோவன் அவர்களுக்கு செம்மொழி இளம் அறிஞர் விருதினை இந்திய அரசின் செம்மொழி நிறுவனம் விருதுகளை அறிவித்திருப்பதை இட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். பொருத்தமான நேரத்தில் பொருத்தப்பாடுடைய ஒருவருக்கு வழங்குவதால் அவ்விருது பெருமையடைகின்றது.
வெள்ளத்தால் அவரது புதுச்சேரி வீடு தண்ணீரில் நிரம்பியிருந்த போதும் தன்னால் சேர்க்கப்பட்ட அரிய நூல்கள் தண்ணீரில் வீனாகி விட்டதே என்று கலங்கியவர் அப்பெருந்தகை. நாம் எல்லோரும் பெரும்பாலும் பிரிசித்திப்பெற்ற பெருந்தலைவர்களைப் பற்றியே எழுதுவோம். ஆனால் அவரோ குக்கிராமங்களில் இருந்து தமிழ்ப்பணி செய்து வரும் தமிழ்ப்பெருந்தகைகளை எமக்கு தனது வலைப்பூவின் வாயிலாக எடுத்தியம்பியவர்.
இவரது நூல்கள்
- மாணவராற்றுப்படை
- பனசைக்குயில் கூவுகிறது
- அச்சக ஆற்றுப்படை
- மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்
- விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்
- பாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு
- மணல்மேட்டு மழலைகள்
- இலக்கியம் அன்றும் இன்றும்
- பாரதிதாசன் பரம்பரை
- பொன்னி - பாரதிதாசன் பரம்பரை
- பொன்னி ஆசிரியவுரைகள்
- அரங்கேறும் சிலம்புகள்
- பழையன புகுதலும்
- வாய்மொழிப்பாடல்கள்
- நாட்டுப்புறவியல்
- அயலகத் தமிழறிஞர்கள்
- இணையம் கற்போம்
இவரது வலைப்பூவினை கட்டு மகிழுங்கள்
2 கருத்துகள்:
அற்புதமான படைப்புகள் வாழ்த்துக்கள் !
நண்பர்களே இதுவரை திருடப்படாதா உங்கள் குட்டி இதயங்களையும் சத்தம் இல்லாமல் திருடி செல்ல விரைவில் வருகிறது இந்த சங்கரின் அதிரடி படைப்பான கரை தொடாத கனவுகள் உண்மை சம்பவங்கள் ஒரு தொடர்கதையாக ,,,,
http://wwwrasigancom.blogspot.com/
shankarp071@gmail.com
சங்கர்
நன்றி நண்பரே இளங்கோவை அறிமுகம் செய்ததற்கு
கருத்துரையிடுக