Exam

புதன், 18 ஜூன், 2008

எனதருமை மாணவா!

என் பெருமைக்குரிய மாணவன் ரவிகாந்தனைப்பற்றி இங்கு நான் கூற விரும்புகின்றேன். வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் நடைபெறும் தகவல் தொழில்நுட்ப பயிற்சி நெறியில் பயின்ற மாணவர்களில் ரவிகாந்தன் அவர்களும் ஒருவர்.

வகுப்பறையில் மிகுவும் சாதுவானவர். அதிகம் கதைக்கமாட்டார். ஆனால் கூறிய பார்வையும் ஆழமான சிந்தனையும். உதட்டோரத்தில் இலேசான புண்ணகையும் இவரின் அடையாளங்கள்.

இன்று இணையத்தில் சோழர் தலைவன் என்ன புனைப்பெயருடன் கலக்கிக் கொண்டு இருக்கின்றார். இவரின் வலைப்பதிவுகள்
http://siripukal.blogspot.com/
http://iravalkal.blogspot.com/

இரவல்கள் வலைப்பதிவில் தனது கவித்திறத்தைக் காட்டியுள்ளார்.
நகைச்சுவையிலும் தான் வல்லவர் என்பதை அவரின் சிரிப்புள் வலைப்பதிவு சொல்கின்றது.

இதுமட்டுமா? எங்கு சென்றாலும் நான் இருப்பேன் என்பது போல் orkut பகுதிக்கு சென்றாலும் அங்கும் தனது எழுத்தாற்றலால் சிறந்து விளங்குகின்றார் எனது மாணவர் ரவிகாந்தன். உண்மையில் ஓர் ஆசரியர் ஒரு மாணவனை தனது மாணவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகின்றார் என்றால் என்னைப் பொருத்தமட்டில் அது சோழர்தலைவன் ரவிகாந்தன் தான்.

இவரைப் போன்று தான் கற்றவற்றை எவர் ஒருவர் பயன்பாட்டில் கொண்டுவந்து பயன்படுத்த நினைக்கின்றாரோ அவரை எனது மாணவர் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமையடைகின்றேன்.

3 கருத்துகள்:

ம.கஜதீபன் சொன்னது…

வணக்கம். ரவிகாந்தனின் பதிவுகளினை பாரத்தேன். நன்றாயிருந்தது. புதிய பதிவாளர்களினை தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்.

HK Arun சொன்னது…

வணக்கம்

நானும் ரவிகாந்தனுடைய கூகிள் குழுமத்தில் இணைந்துள்ளேன். உண்மையில் ஒரு ஆசிரியராக நீங்கள் பெருமைக் கொள்ளும் அதே நேரம் ஒரு ஈழத்தவன் "சோழர் தலைவன்" எனும் பெருமை எமக்கிருக்கிறது.

வெறுமனே அப்படி இப்படி என்று விமர்சனத்தொடர்களையே அதிகம் வலைப்பதிவுகளில் இட்டு வரும் வேளையில் ஆக்கப்பூர்வமான ரவிகாந்தனின் முயற்சிகள் பாராட்டுக்குறியவை.

நன்றி

பெயரில்லா சொன்னது…

I`m proud of you my son.
Yours aunt
Mary