கொழும்பில் இருந்து வடக்கின் வாசலாம் வவுனியாவின் முதல் சோதனைச்சாவடி ஈரட்பெரியகுளத்தில் சோதனை நிமித்தம் நிற்கும் போது அங்கே பெரிய பலகையில் எழுதப்பட்ட விடயம் சற்று என்னை சிந்திக்க வைத்தது. "எச்சரிக்கை பார்த்தீனியம் உள்ள பிரதேசத்தில் பிரவேசிக்கின்றீர்கள்" என்று. இந்திய அமைதிகாக்கும் படை எமக்கு விட்டுச் சென்ற மாறாத வடுக்களில் இதுவும் ஒன்றுதான்.
எனது நினைவுகள் சற்று பின்நோக்கி செல்கின்றது. எனக்கு வயது 12 இருக்கும் அப்போது இந்திய அமைதிப்படையின் ஒரு பிரிவினர் எமது பிரதேசத்தில் உள்ள இறம்பைக்குளத்தில் குளத்தினுள் முகாமிட்டு இருந்த காலம் அது. அங்கே அவர்கள் சாப்பிடுவதற்கென்று செம்மறி ஆடுகள் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு பட்டியிடப்பட்டிருந்தது. அவைகள் மூலம் வந்தவை தான் இந்த பார்த்தீனியம். இன்று எமது வவுனியா மண்ணில் இது ஒரு சாபக்கேடடாக உள்ளன. "எச்சரிக்கை மிதிவெடிகள்" என்ற எச்சரிக்கைகளுக்கு மத்தியில் அவற்றிற்கு நிகராக இன்றும் பார்தீனியத்தின் எச்சரிக்கைகள் வேறு எம்மை கலங்கடித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
1 கருத்து:
சிலவருடங்களுக்கு முன்பு அவற்றை அழிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் தற்போது கேட்பாரற்று கிடக்கின்றது. வெறும் பலகைகளில் எழுதப்பட்ட வாசகங்கள் ("எச்சரிக்கை பார்த்தீனியம் உள்ள பிரதேசத்தில் பிரவேசிக்கின்றீர்கள்") மட்டுமே மிச்சம்.
கருத்துரையிடுக