Exam

புதன், 14 ஜனவரி, 2009

வவுனியாவில் தைத்திருநாள்-2009

அனைவருக்கும் என் இனிய தமிழர் புதுவருட தைத்திருநாள் வாழ்த்துக்கள்.
எங்கள் வவுனியாவிலும் பொங்கல் நிகழ்வுகள் கோலாகலமாக(??!!) கொண்டாடப்பட்டது. இது தமிழர் திருநாள் அல்லவா? அதனால் நாங்கள் இதை கொண்டாடினோம்.இது எங்கட வீட்டின் தயாரிப்பு

நல்லப்பிள்ளையாய் நான்

அம்மா பொங்கல் முடிச்சிட்டாங்க இனி சாப்பாடுதான்.
தாயில்லாமல் நானில்லை. இந் நன்நாளில் தாயிடம் ஆசீர்வாதம்.
அம்மா அண்ணா அன்னி, மருமகன், மற்றும் பக்கத்து வீட்டு சிறுவர்களுடன்

இவர் இந்தப் பொங்கலுக்கு புதுவரவு. அண்ணாட மகன் பிறந்து 45 நாட்கள்.
அம்மா அதிகாலையில தன்ற வேலையை ஆரம்பிச்சிட்டாங்க.
தங்கை வீட்டுக்காரர் கடையில பொங்க வெளிக்கிட்டுட்டார்.
அதிகாலையில் பொங்கலுக்கான வேலைகள் ஆரம்பி்ச்சாச்சி.


எங்கள் வீட்டிற்கு முன்பு உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுரர் ஆலயத்தின் ஆதரவற்ற பெண்களுக்கான சிறுவர் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வின் நிழற்படங்கள்.

11 கருத்துகள்:

Focus Lanka சொன்னது…

வணக்கம் ..!
யாழ்பாணத்தில் எங்கள் வீட்டு பொங்கலை நினைவுபடுத்திய உங்கள் பதிவு.
அது ஒரு கனாக் காலமாக போய்விடுமோ என்கிற அச்சம் வந்திருக்கிறது.

S.Lankeswaran சொன்னது…

நன்றி நிலாப்பிரியன். உண்மை தான் சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரப் போல வருமா?

Expatguru சொன்னது…

நல்ல பதிவு இலங்கேஸ்வரன். உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் மிகச்சிறப்பான விழா பொங்கல். அதை புகைப்படங்கள் மூலம் மிக அருமையாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். நேரில் பார்ப்பது போல இருந்தது.

Gowsy Seelan சொன்னது…

பொங்கல் என்பது
சங்கத் தமிழனின்
தேசியத் திருவிழா
லீசிய விதையின்
வேரில் முளைத்த
வியர்வைப் பூக்களின்
இயற்கைத் திருவிழா


இனிய தமிழர்திருநாள்
நல் வாழ்த்துக்கள்
உரித்தாகட்டும்
Thai Thiru Naal Vaalthugal

BOOPATHY சொன்னது…

வாவ்! என்ன அற்புதமான பொங்கல் காட்சிகள்; எனது கண்ணே பட்டுவிடும் போல் இருக்கிறது. மீண்டும் ஞாபக அலைகளுக்குள் மாண்டுவிட்டேன் நன்றிகள் பல.

S.Lankeswaran சொன்னது…

நன்றி Expatguru. தமிழர் விழா அல்லவா என்றும் நம் இனத்தின் பெருமை கூறு விழா. ஆனால் இப்பொழுதல்லாம் இங்கு மாட்டுப் பொங்கல் பெரிய அளவில் கொண்டாடப்படுவதில்லை.

S.Lankeswaran சொன்னது…

கௌஷலா அவர்களே லீசிய என்ற வார்த்தையின் பொருள் என்ன?

S.Lankeswaran சொன்னது…

பூபதி அவர்களே மிக்க நன்றி.என்ன தான் வெளிநாட்டு வாழ்க்கை என்றாலும் நம் நாட்டு கலாச்சார முறைகளையும் பண்டிகைகளையும் நினைத்துப்பார்க்கும் போது அவற்றை இழந்து தான் நம் புலம் பெயர்ந்தவர்கள் இயந்திர வாழ்க்கை நடாத்துகின்றார்கள்.

Gowsy Seelan சொன்னது…

மண்ணிக்கவும் அது லீசிய இல்லை வீசிய தான் சரியானது மாறி type பண்ணி விட்டேன்

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

உங்களுடன் பொங்கல் உண்ட நிறைவு ஏற்பட்டது.

மு.இளங்கோவன்
புதுச்சேரி

சுவடுகள்... சொன்னது…

சேர் பசிக்குது சாப்பிட வரலாமா?