
ஆசிரியருக்கான விருது, இம்முறை அமெரிக்க வாழ் இந்தியரான ராதிகா பிளக்காட் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்கப் பள்ளிகளில் அறிவியல் மற்றும் கணித பாடங்களைச் சிறப்பாக கற்றுத் தரும் ஆசிரியர்களுக்கு ஜனாதிபதியின் 'நல்லாசிரியர்' விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு நல்லாசிரியர் சான்றிதழும், ரூ.5 லட்சம் பரிசும் அதிபரால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான சிறந்த அறிவியல் ஆசிரியருக்கான விருது, அமெரிக்காவில் வாழும் இந்தியரான ராதிகா பிளக்காட் என்பவருக்கு வழங்கப்பட்டது. இதற்கான விருதை அதிபர் ஒபாமா வழங்கிப் பாராட்டினார்.
ராதிகா பிளக்காட், மேரி லேண்டில் கல்வெர்ட் கவுண்டியிலுள்ள கண்டிங்டவுன் உயர் நிலைப்பள்ளியில் உயிரியல் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். _
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக