Exam

ஞாயிறு, 27 ஜூலை, 2008

அழிவைத் தரும் பொலித்தீன் பைகள்

நண்பர்களே இன்று நமது சுற்றுச் சூழலை நாசமாக்கும் காரணிகளில் முக்கிய இடத்தை பிடிப்பது சொப்பின் பேக்குகள் (மண்ணிக்கவும் சரியான தமிழ் பதம் தெரியவில்லை).

நான் எனது கொள்கைகளில் ஒன்றாகக் கடைபிடிப்பது இயன்றளவு சொப்பின் பேக்குகளை பயன்படுத்துவதில்லை. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நான் கடைகாரர்கள் கொடுத்த சொப்பின் பேக்குகளை வேண்டாம் என்று சொன்ன எண்ணிக்கை சுமார் 182. இயன்ற அளவு நாம் காகித பேக்குகளையோ அல்லது நிரந்தரமாக பொருட்களை வாங்கி கொண்டு செல்வதற்கு ஒரு பையையோ வைத்திருந்தால் மிகவும் நன்றாக இருக்குமே. என்ன நண்பர்களே இன்றிலிருந்தாவது நீங்களும் சொப்பின் உபயோகத்தை சற்று குறைத்து எமது எதிர்கால சந்ததிக்கு நல்லதை செய்வோமே.

3 கருத்துகள்:

ம.கஜதீபன் சொன்னது…

அது "சொப்பின்" அல்ல. "சொப்பிங் பாக்"(SHOPPING BAG) என்பதே சரியான பதம் சோழர் தலைவரே...! நமது தமிழ்ப்பேச்சு வழக்கில் SHOPPING BAG என்பது மருவி "சொப்பின் பாக்" ஆக உள்ளது. கடையில் பொருள்கொள்வனவில் ஈடுபடுவதற்கு பயன்படுத்தியமையினாலே தான் அப்பெயர் வந்திருக்கலாம் என்று நினைக்கின்றேன்.

S.Lankeswaran சொன்னது…

மண்ணிக்கவும் நான் சோழர் தலைவன் இல்லை அவரின் ஆசிரியர்

ம.கஜதீபன் சொன்னது…

ஓ.... நான் அதற்கு தங்களிடம் மன்னிப்புக்கேட்டுக்கொள்கின்றேன்.