
எனது மாணவன் செல்வன்.க.சேந்தன்(வயது 15) அவர்களின் சுனாமி பற்றிய கவிதை ஆக்கத்தை இங்கே பதிவதில் நான் பெருமை கொள்கின்றேன்.
சுனாமி
இராட்சத நீர் நாக்குகளில்
பூச்சிகளாய்ப் மாட்டுபட்டனர்
நெய்தல் நில மக்கள்.
மனித நேயம்
வெளிப்பட்ட தருணம்
என்றனர் பலர்.
இயற்கையே
நீயும் தவளைப் பரிசோதனையில்
ஈடுபடத் தொடங்கி விட்டாயோ?
வேண்டாம்!
என் மக்களின் வாழ்வு
எவ்வளவோ விபரீதம் நிறைந்தது.
5 கருத்துகள்:
ம்ம்
வணக்கம் சேந்தன்! உங்கள் சுனாமி
கவிதையை வாசித்தேன்.இலக்கியமும் விஞ்ஞானமும் கலந்த சொற் பிரயோகத்தை பாவித்துள்ளீர்.இன்னும் பல கவிதைகள் எதிர் பார்க்கிறேன். வாழ்த்துக்கள்
கௌஷி சீலன்-கனடா
ஆகா.. அருமை... அருமை... 15 வயது சேந்தனின் உட்கிடக்கை கவிதை வழியாக வந்திருக்கும் திறனை பார்த்ததும் மனம் பூரிப்படைகின்றது.எனக்கென்னவோ வவுனியா மண் இப்பொழுதுதான் இலங்கேஸ்வரன் வாயிலாக மணப்பதாக தெரிகின்றது. வாழ்த்துக்கள்... !தொடர்ந்து ஊக்குவியுங்கள்.
மிக்க நன்றி திரு.ம.கஜதீபன் தங்களைப் போன்ற ஆர்வலர்கள் இடும் பின்னூட்களை அதன் படைப்பாளிகளிடம் காட்டும் போது அதைப் பார்க்கும் எனது மாணவர்கள் தங்கள் கவிதைத் திறனை காட்ட இப்பொழுது முன்வருகின்றார்கள். எவருக்கும் ஓர் அங்கீகாரம் கிடைக்கும் போது தான் அவர்கள் ஒளிர்வு பெருகின்றார்கள் அந்த வகையில் நீங்கள் மற்றும் கௌசலா போன்றோர் நல்லதொரு சேவையை செய்து வருகின்றீர்கள். மிக்க நன்றி
சேந்தனின் கவிதை அருமை.அதிலும் அருமை சேந்தனின் கவிதையை உங்கள் பிளாக இல் வெளியி்ட்ட உங்களின் பெருந்தன்மை.
அன்புடன் சஞ்சயன்.
Quinston Compuer வவுனியா, உரிமையாளர் Jack உங்களை கேட்டதாகச் சொலலச் சொன்னார்.
கருத்துரையிடுக