யாசித்தவளே!
நீ துயிலும் போது இரவு சகாப்த்தத்தில்
நான் வருகிறேனா?
அந்த ஒட்டகை விழுந்த மனதில் என்னை
எண்ணிப் பாரடி.
விழிகளின் சபலத்தால் நாம் தவழ்ந்த
அந்த ஏகாந்த ராத்திரிகள் நினைவில் வரும்
துயில்களின் இரவில் இருகண்களும்
ஞாபகமூட்டிய கற்பனை சுவரொட்டிகள்
நினைவில் இருக்கின்றன.
என் விரல்கள் பட்ட உன் புருவம்
அதில் நனைந்த என் எண்ணச் சிறகுகள்
கண்ணுக் கெட்டியவரை கற்பனைகள்
சொட்டுதடி.
காதலே! நீ நிஜமானால்
என் விரல் தீ்ண்டியவளை என்னோடு
சேர்த்துவிடு.
என் தனிமைகள் என்னை சிந்திக்க
வைத்தன சிதறிய எண்ணத்தில்
எழுந்தவை இவை.
காதலியே நீ என்னை யோசிப்பாயா?!
காதலி
நான் நீயான போது தீயானாய்!
நீயான ”நான்” ஆனபோது தூவானமாய் நீயானாய்
நான் நானாக மாற முயல
நீ என் நெடுஞ்சாலையானாய்
பூவானமாய் நான் மாற
நிலவானாய் நீயாக என் கவிக்கு
முழுவானம் சுயசரிதையாய்
கவிமுகர்ந்தேன் என் கற்பனைக்கு
காதல் தாரகையாய் கவிதந்தாய் நீ தனியாக!
கலைஞானம் வடித்து பல கோவைகளில்
காதலியானாய் உன் பதில் உரையா!
காதலியானாய் என் மன பட்டம் பெற்று நீ!
5 கருத்துகள்:
வணக்கம் இலங்கேஸ் அண்ணா
வவுனியா மண் வீசும் ஒரே தளம் என்றால் அது உங்கள் இணையாத்தளம் தான். மென்மேலும் உங்கள் இணையாத்தளம் வளர என் வாழ்த்துக்கள்.நினைத்தால் கூட வரமுடியாமல் இருக்கும் எங்களுக்கு நினைத்தவுடன் ஒடிப்போய் பார்க்குமளவுக்கு உங்கள் இணையத்தளம் நற்பயனை எனக்கு தருகிறது.
நீங்கள் சொல்வது சரிதான் கெளஷலா! ஆனாலும் என்னைப்பொறுத்தவரைக்கும் வவுனியா மண்ணினை பற்றி இலங்கேஸ்வரன் போன்ற பலரும் பதியவேண்டும். அப்போது தான் மண்ணின் மகிமை உலகறியும். நீங்களும் வவுனியா வாசியா?
உண்மைதான் கஜதீபன் எனது தகவல் தொழில்நுட்ப மாணவர்களை இதில் ஈடுபடுத்தி தற்போது சிலர் வலைப்பதிவை ஆரம்பித்தும் உள்ளார்கள். ஏன் நீங்களும் வவுனியா மண்ணின் பெருமையை உலகிற்கு எடுத்தியம்பும் ஓர் வலைப்பதிவாளர் தானே. உங்களி் வலைப்பூ எனது பிடித்தமான வலைப்பதிவுகளில் ஒன்று
நன்றி. திரு.இலங்கேஸ்வரன் அவர்களே..... (என்னுடைய பேச்சுவழக்கு கட்டுரைகளினை நீங்கள் மதிப்பளிப்பதையிட்டு நான் பெருமையடைகின்றேன்.)
கருத்துரையிடுக