எழுத்தாற்றலை வளர்க்க வேண்டும், தங்கள் ஆக்கங்கள் ஏதாவது ஒரு வகையில் அங்கீரிக்கப்படும் பொழுது அதை ஆக்கியோரின் உள்ளம் மகிழும் அதற்கு ஓர் உந்து சக்தியாக எனது வலைப்பதிவு அமைய வேண்டும் என்ற ஆவலில் இப்பதிவை தொடர்கின்றேன்.
“ இதன் முதல் முயற்சியாக எனது தகவல் தொழில் நுட்ப மாணவன் செல்வன். சியாம்குமாரின் கவிதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்”
நீ
என் மீது நடாத்துத்தும் நிழல் யுத்தம்
என் மீது நிறைவேற்ற நினைத்த
நம்பிக்கை இல்லா தீர்மானம்
என்னை கண்டதும் வெளிநடப்பு
என்னை பேசவிடாமல் கூச்சலிடும்- நீ
இலங்கை அரசின் இனவாத கட்சியா?
சிதைவு
அடர்ந்த புருவங்களும் -உன்
அகன்ற விழிகளும்
என்னை சிதைக்கின்றன.
மன்னிப்பு
நாம் செய்த தவறுக்காக
உயர்ந்த மனிதன் தரும் பரிசு
ஞாபகம்
நான் தந்த முத்தம்
நீ இட்ட சத்தம்
நாம் செய்த குறும்பு
என் இறுதி மூச்சு வரை
மறவாது.
ஒப்பந்தம்
சாட்சிகள் இன்றி
காட்சிகள் இன்றி
விழி சொன்ன உணர்விற்கு
கைசாத்தானது...
காதல் எனும் ஒப்பந்தம் .
புரியும் (காதல்)
உன் காதுகளை கேள்-என்
பற்களின் எண்ணிக்கை சொல்லும்
உன் கண்கங்களை கேள்-என்
உதடுகளின் தடிப்பை சொல்லும்
உன் உதடுகளை கேள் என்
முத்தத்தின் வலிமை சொல்லும்
என் உள்ளத்தை கேள் -நான்
கொண்ட காதல் புரியும்.
நம் தேசம்
ஓ... தமிழனே - உன்
இறுதி இலக்கை அடைய -ஏன்
மறுக்கிறாய்? மறக்கின்றாய்?
ஜாதி மதம் மறந்திடு-உன்
தேசத்திற்காய் நிமிர்ந்திடு
உன்னால் முடியும் அடைந்திடு
உன் இனம் படும் துன்பம் அறியுமா அந்நிய தேசம்?
உன் இனத்திற்கு -ஒரு முகவரி கொடு
உன் மொழிக்கு-ஒரு முகவரி இடு-
உன் இனத்தின் துன்பத்தை துடைக்காதே
உடைத்தெறி!!!
நாளை மலரும் நம் தேசம்.
3 கருத்துகள்:
ஆகா... மிகச்சிறப்பாக உள்ளன கவிதைகள். ஒவ்வொரு வரியிலும் ஆழம் இருக்கின்றது. உயிர் இருக்கின்றது. சியாம்குமார் போன்றவர்களினை ஊக்குவிப்பதற்கு பாராட்டுக்கள் திரு.இலங்கேஸ்வரன் அவர்களே.....! சியாம்குமாரும் ஒரு வலைப்பூப்பதிவாளனா?
வவுனியா மண்ணிற்கு மணஞ்சேர்த்த திரு.தழிழ்மணி அகளங்கன், தமிழருவி.சிவகுமாரன். போன்றவர்கள் இருக்கும் மண்ணில் புதிதாக பூத்திருக்கும் சியாம்குமார் என்ற பூ முழுமையாக மலர்ந்து மணம் வீசும் என்பதில் எதுவித அய்யமுமில்லை.....
இல்லை திருஇ.கஜதீபன் அவர்களே அவர் எனது மாணவன். இப்பொழுது தான் எனது தகவல் தொழில்நுட்ப வகுப்பில் சேர்ந்துள்ளார். இன்னும் சில வாரங்களில் வலைப்பதிவை தொடங்குவார் அதற்கான பயிற்சிகளை ஆரம்பிக்க உள்ளேன் அவருக்கு.
கருத்துரையிடுக