Exam

ஞாயிறு, 30 மார்ச், 2008

தினக்குரல் நாளேட்டிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

எமது வவுனியா தமிழ் வலைப்பதிவை இவ்வாரம் (30-03-2008) அன்றைய ஞாயிறு தினக்குரலில் "வாரம் ஒரு வலைப்பதிவு பகுதியில்" வெளியிட்டமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.


எம்மை போன்ற வளர்ந்து வரும் இளைய தலைமுறையை நல்ல வழியில் வளர்த்து மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி வரும் தினக்குரல் நிறுவனத்தாருக்கு நான் என்றும் நன்றிக் கடன்பட்டுள்ளேன்.


"வாரம் ஒரு வலைப்பதிவின்" ஆசிரியரான திரு.க.தே.தாசன் எமது வலைப்பதிவை பற்றி மிகவும் திறமையாக எடுத்தியம்பியுள்ளார். அவரின் எழுத்தாற்றலுக்கு நன்றிகள் பல.

எனது ஏனைய வலைப்பதிவுகள்
itvav.blogspot.com
sivankovil.blogspot.com
shanmugha.blogpsot.com

செவ்வாய், 11 மார்ச், 2008

கருங்குருவிக்கு தன்மகனின் உடையை கொடுத்த என் தங்கை


எங்கள் வீட்டில் உடைகளை காயப் போட்டால் கருங்குருவிகள் அதில் கூடு கட்டி விடுகின்றன. இதனை பார்த்த என் தங்கை அவற்றை பிரிக்க மனமில்லாமல் தன் மகனின் உடையில் ஒன்றை அப்படியோ விட்டுவிட்டார். இப்பொழுது அதில் குருவியாரும் கூடுகட்டி குடித்தனமும் நடாத்தி குஞ்சும் பொரித்து விட்டார். எனக்கு இச்செயலைப் பார்த்தவுடன் "முல்லைக்கு தேர் கொடுத்த பாரி"யின் கதை தான் ஞாபகம் வந்தது.