Exam

ஞாயிறு, 27 ஜூலை, 2008

அழிவைத் தரும் பொலித்தீன் பைகள்

நண்பர்களே இன்று நமது சுற்றுச் சூழலை நாசமாக்கும் காரணிகளில் முக்கிய இடத்தை பிடிப்பது சொப்பின் பேக்குகள் (மண்ணிக்கவும் சரியான தமிழ் பதம் தெரியவில்லை).

நான் எனது கொள்கைகளில் ஒன்றாகக் கடைபிடிப்பது இயன்றளவு சொப்பின் பேக்குகளை பயன்படுத்துவதில்லை. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நான் கடைகாரர்கள் கொடுத்த சொப்பின் பேக்குகளை வேண்டாம் என்று சொன்ன எண்ணிக்கை சுமார் 182. இயன்ற அளவு நாம் காகித பேக்குகளையோ அல்லது நிரந்தரமாக பொருட்களை வாங்கி கொண்டு செல்வதற்கு ஒரு பையையோ வைத்திருந்தால் மிகவும் நன்றாக இருக்குமே. என்ன நண்பர்களே இன்றிலிருந்தாவது நீங்களும் சொப்பின் உபயோகத்தை சற்று குறைத்து எமது எதிர்கால சந்ததிக்கு நல்லதை செய்வோமே.

புதன், 23 ஜூலை, 2008

இந்திய அமைதிப்படை விட்டுச் சென்ற பரிசு

கொழும்பில் இருந்து வடக்கின் வாசலாம் வவுனியாவின் முதல் சோதனைச்சாவடி ஈரட்பெரியகுளத்தில் சோதனை நிமித்தம் நிற்கும் போது அங்கே பெரிய பலகையில் எழுதப்பட்ட விடயம் சற்று என்னை சிந்திக்க வைத்தது. "எச்சரிக்கை பார்த்தீனியம் உள்ள பிரதேசத்தில் பிரவேசிக்கின்றீர்கள்" என்று. இந்திய அமைதிகாக்கும் படை எமக்கு விட்டுச் சென்ற மாறாத வடுக்களில் இதுவும் ஒன்றுதான்.
எனது நினைவுகள் சற்று பின்நோக்கி செல்கின்றது. எனக்கு வயது 12 இருக்கும் அப்போது இந்திய அமைதிப்படையின் ஒரு பிரிவினர் எமது பிரதேசத்தில் உள்ள இறம்பைக்குளத்தில் குளத்தினுள் முகாமிட்டு இருந்த காலம் அது. அங்கே அவர்கள் சாப்பிடுவதற்கென்று செம்மறி ஆடுகள் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு பட்டியிடப்பட்டிருந்தது. அவைகள் மூலம் வந்தவை தான் இந்த பார்த்தீனியம். இன்று எமது வவுனியா மண்ணில் இது ஒரு சாபக்கேடடாக உள்ளன. "எச்சரிக்கை மிதிவெடிகள்" என்ற எச்சரிக்கைகளுக்கு மத்தியில் அவற்றிற்கு நிகராக இன்றும் பார்தீனியத்தின் எச்சரிக்கைகள் வேறு எம்மை கலங்கடித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

திங்கள், 21 ஜூலை, 2008

கமலின் சிந்தனையும் நமது எண்ணங்களும்

தசாவதாரம் படம் வெளிவந்தது தான் வந்தது அதில் இருந்து இணையத்தில் அதை சிலர் விமர்சனம் என்ற பெயரில் சின்னாபின்னப்படுத்துகின்றார்கள். நம்மவர்களுக்கு கதாநாயகன் கதாநாயகி காதல், வில்லனின் எதிர்ப்பு இறுதியில் வில்லனை வென்று எமது கதாநாயகன் வென்றுவிடுவார் இது தான் நம் நாட்டு சினிமா. இதை விட்டு கமல் அவர்கள் தனது கடின உழைப்பில் உருவாக்கிய படத்தை இப்படி சிறிதும் வாஞ்சையின்றி நாம் விமர்சிப்பது மனவருத்தத்தை தருகின்றது.

வெள்ளி, 18 ஜூலை, 2008

தகவல் தொழில்நுட்ப பயிலுநர்களின் பிரிவுபசார விழா

எமது வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் என்னிடம் தகவல் தொழில்நுட்பம் பயின்ற பயிலுநர்களின் 13வது பிரிவின் பிரிவுபசார விழா மற்றும் நன்றி கூறும் விழாவும் கடந்த 09-07-2008 அன்று நடைபெற்றது. அதன் நிழற்பட தொகுப்பு :