Exam

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 10 ஜனவரி, 2009

தகவல் தொழில்நுட்ப பரீட்சை முடிவுகள்

National Certificate in Information and Communication Technology பயிற்சி நெறியில் 2008 ல் பயின்ற மாணவர்களின் பரீட்சை முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. http://www.vtasl.slt.lk/nitc/index.htm சென்று பாருங்கள்.

இப்பயிற்சி வகுப்பில் வவுனியாவில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் என்னிடம் படித்த மாணவர்களுக்கு என்னுடைய இனிய வாழ்த்துக்களையும் வரும் 15-01-2008 ஆம் திகதி தேர்வு எழுதவுள்ள தற்போது என்னிடம் பயிலும் மாணவர்கள் நல்ல முறையில் தேர்வினை எழுதி வெற்றி பெறவும் வாழ்த்துகின்றேன்.

”கடலுக்குப் பயந்தவன் கரையினில் நின்றான், முயன்றவன் அக்கடலினைக் கடந்தான், பயந்தவன் தனக்கே பகையானான், முயன்றவன் உலகிற்கு ஒளியாவான்” என்ற கவியரசின் வைரவாக்கியங்களுக்கு ஏற்ப முயன்றிடுவீர்! முனைந்திடுவீர்!! வென்றிடுவீர்!!!

வியாழன், 23 அக்டோபர், 2008

மாவட்ட இளைஞர் பயிற்சி நிலையம்

இவர்கள் தான் எனது மாணவர்கள். தகவல் தொழில்நுட்பம் படிக்கும் மாணவர்கள். இது வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் அமைந்துள்ளது. இதில் உள்ள அனைவருக்கும் வலைப்பதிவு பற்றி கருத்தரங்கு ஒன்றினை செய்துள்ளேன். பலர் ஆரம்பித்தனர். ஆனால் இரண்டு மாணவர்கள் மட்டுமே செயற்படுத்தி வருகின்றனர். ( மேனனின் கணினி உலகம், மற்றது திலீப்பின் சுவடுகள்)


இடதுபக்கம் நிற்பவர் கணினி வன்பொருள் திருத்தும் பயிற்சி நெறியின் ஆசிரியர், நடுவில் நிற்பவர் வானொலி தொலைகாட்சி திருத்தும் பயிற்சி நெறியின் ஆசிரியர். அடுத்து நிற்பது தகவல் தொழில்நுட்ப பாடநெறியின் ஆசிரியராகிய அடியேன் தான்...


வியாழன், 9 அக்டோபர், 2008

வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் வாணிவிழா-2008

மூவின மக்களும் தொழிற்கல்வி பயிலும், வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் 08-10-2008 அன்று வாணிவிழா நிகழ்வுகள் நடைபெற்றன.

நிகழ்வினை மாவட்ட இளைஞர் பயிற்சி நிலையத்தினர் ஒழுங்கு செய்திருந்தனர்.
இந்நிகழ்வினை தகவல் தொழில்நுட்ப விரிவுரையாளர் திரு.ச.இலங்கேஸ்வரன் அவர்கள் தலைமை ஏற்று நடாத்தினார்.

இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடமாகாணப் பணிப்பாளர் திரு.என்.பேராணந்தம் அவர்கள் பிரதம விருந்தினராகவும், வவுனியா மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவி பணிப்பாளர் திருமதி.ஸ்ரீகாந்தரூபன் விமலேஸ்வரி அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், இளைஞர்சேவைகள் மன்றத்தின் பொருப்பதிகாரி. திரு.ஐ.சுகானி அவர்களும், வடமாகாணக் காரியாலயக் காணக்காளர் அவர்களும் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ள, ஏனைய அலுவலக உத்தியோகத்தர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் கலந்து கலந்து சிறப்பிக்க கலைநிகழ்வுகளுடன் விழா இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்து, இசுலாமிய, சிங்கள, கிறித்துவ மதங்களைச் சார்ந்த மாணவர்கள் பெருமளவில் பங்குபற்றி சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

அந்நிகழ்வின் நிழற்படத் தொகுப்புக்களை இங்கே பாருங்கள்.

வெள்ளி, 18 ஜூலை, 2008

தகவல் தொழில்நுட்ப பயிலுநர்களின் பிரிவுபசார விழா

எமது வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் என்னிடம் தகவல் தொழில்நுட்பம் பயின்ற பயிலுநர்களின் 13வது பிரிவின் பிரிவுபசார விழா மற்றும் நன்றி கூறும் விழாவும் கடந்த 09-07-2008 அன்று நடைபெற்றது. அதன் நிழற்பட தொகுப்பு :