01-10-2008 அன்று பிறந்தநாள் கொண்டாடும் எங்கள் அன்புச் செல்லம் திலக்சனாவிற்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் சித்தா பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ இறைவனைப்பிரார்த்திக்கின்றேன்.
காலமேடையில் - என் கால்கள் ஆடிய நடனம் தாளம் தப்பியதால் சுருதி சேராத ராகங்களாகா மௌனமாகிப் போன-என் சலங்கையின் சங்கீதங்களோடு சந்தோசங்களும்... தந்தியறுந்த வீணையைப்போல வீணாகவே........................! முறிந்து போன கால்களுக்கடியில் அல்லவா முற்றுப்புள்ளியான என் நடனமும்??????????????
இனி உன் நிலை? தந்தை முன் பெட்டிப்பாம்பு அன்னை முன் வளர்ப்புப்பூனை பள்ளியில் கலாட்டா தெருவில் காடையன் கோயிலில் கோமாளி பட்டப்படிப்புக்கு இத்தனை பட்டங்களா? இனி இறைவன் முன் உன் நிலை என்ன.........? நவீன இளைஞனே?
விடியலின் விடிவு எது? தினம் தினம் T.V. முன் கண்முழித்து வாய்திறந்து சித்திரப் பதுமைகளாய் உலகை மறந்து தமையும் மறந்து இருட்டுக்குள்ளே இருளை அடக்க குருட்டுத் தவம் செய்யும் இளையோரே! உங்கள் விடியலும் விடிவை எதிர்பார்த்து முடங்கிக் கிடக்கிறது என்பதை மறந்து விடாதீர்!