Exam

புதன், 2 ஜனவரி, 2008

தொலைக்காட்சி நாடகங்களும் வவுனியா மக்களும்

இன்று வவுனியாவில் பெரும்பாலான பிள்ளைகளின் கல்வி அறிவு பின்தங்கிச் செல்ல (மற்ற பிரதேசங்களிலும் தான்) தொலைக்காட்சி நாடகங்களும் ஒரு காரணம்.

முக்கியமாக அவ் நாடகங்களில் பழிவாங்களும், சூழ்ச்சியுமே அதிகமாக உள்ளது.

எமது பிரதேசத்தில் முன்பெல்லாம் மாலை நேரங்களில் முற்றங்களில் பெரியோர்கள் இருந்து சிறுபிள்ளைகளுக்கு கதை சொல்வார்கள் தங்கள் அன்றாட குடும்ப செய்திகளை பரிமாறுவார்கள். இப்பொழுது மாலை 6 மணிக்கெல்லாம் சன் ரீவியில் ஒளிபரப்பாகும் (எங்கள் ஏரியாவில் சன் ரீவி, கலைஞர் ரீவி, விஜய் ரீவி எல்லாம் இலவச ஒளிபரப்பு வேறு) அழுகை நாடகங்கள் தான்!

இவற்றை பார்க்கும் மக்களின் மனநிலை எவ்வாறு இருக்கும். சன் ரீவியில் தான் இப்படி என்றால் கலைஞர் ரீவி அதற்கு போட்டியாக இன்றும் அதிகமான பழிவாங்கள், சோக நாடகங்களை ஒளிபரப்புகின்றது. சரி விஜய் ரீவி பக்கம் திரும்பினால் அதில் நிலமை பரவாயில்லை. ஆனால் கனாக் காணும் காலங்களைப் பார்த்து விட்டு நமது பி்ள்ளைகள் அது போல மாறிவிடுவார்களோ என்ற பயம். சரி நம்நாட்டு தொலைக்காட்சிகளில் என்ன போகின்றது எனப் பார்க்கலாம் என்று திருப்பினால்?????? அதில் தென்னிந்திய செய்மதி தொலைக்காட்சி (சன், விஜய்...) களில் இருந்து கடன்வாங்கிய அதே நாடகங்கள். என்று மாறும் இந்த நாடக மேகம்.

2 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

நீங்கள் சொல்வது உண்மைதான். நீங்கள் வவுனியாவைச் சேர்ந்தவரா?
ஆசிரியப் பணியில் இருக்கிறீர்களா? தமிழருவி த. சிவகுமாரன் எனக்கு பரிச்சயமானவர். உங்களுக்கு பழக்கம் உண்டா?

அன்புடன்,
ஜோதிபாரதி
www.jothibharathi.blogspot.com

சோழர் தலைவன் சொன்னது…

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஒருகாலத்தில் இந்திய தமிழ் தொலைகாட்சி அலைவரிசைகள் பயனுள்ள நிகழ்ச்சிகளை வழங்கின ஆனால் இப்போது எந்த நேரம் பார்த்தாலும் நாடகம் நாடகம் நாடகம். அது கிடக்கட்டும் நம் நாட்டு தொலைக்காட்சிகள் அதை விட மோசம் அங்கு பிரபலமாகிய அதே நிகழ்ச்சியை அப்பிடியே வாங்கி போடுகிறார்கள் அல்லது அதே நிகழ்ச்சியை பிரதி செய்கின்றார்கள். அடுத்தவருடைய கற்பனையை திருடி தமது போல காட்டிக்கொள்கிறார்கள்