ஈழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்குக் கரையில் செம்லை என்ற ஊரில் பிறந்த இரகுநாதன் கவியழகன் என்ற எமது தமிழ்ந் சகோதரர் ஒருவர் இந்தியாவின் மத்திய கல்வி நிறுவனத்தினால் (சி.பி.எஸ்.ஈ) பரீட்சையில் மொத்தம் 500 க்கு 464 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
திருச்சி மகாத்தமா காந்தி மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயின்றுவரும் இம்மாணவன் கல்வியில் மட்டுமன்று, ஓவியம், மிருதங்கம் போன்ற நுண்கலைகளிலும் கோ-கோ, கிறிகட், பற்மிண்டன் (பூப்பந்து), மற்றும் தடகள விளையாட்டுக்களிலும் சிறந்த வீரனாக விளங்கி வருகிறார்.
எட்டாவது வயதில் தமிழ்நாடு ரீதியில் மணவர்கள் மத்தியில் நடைபெற்ற காரத்தே போட்டிகளில் பங்குபற்றி முதன்மைப் பதக்கங்கள் பெற்றுள்ளார். அகில இந்திய கராத்தே களகம் இவருக்கு யுவகலாபாரதிபட்டம் வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது. ஓவியத்துறையில் இவருடைய ஈடுபாடும் ஊக்கமும் ஒன்பது வயதிலேயே இவரை கலைமாமணி என்ற கௌரவப் பட்டத்திற்கு சொந்தக்காரனாக்கியது.
இவ்வளவு சிறப்புக்களைக் கொண்டிருக்கும் எம்மவர் சிறுவயது முதல் கல்வி கற்பதில் பல்வேறு இடையூறுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஆயினும் இவரிடம் காணப்பட்ட சிறப்புத்தன்மைகள் காரணமாக இவரை இவர் கல்வி கற்ற மகாத்துமா காந்தி நூற்றண்டுக் கல்விக்கூடம் விசேட பயிற்சிகளில் ஈடுபடுத்தியது. அதனால் பங்கு பெறுகின்ற எந்தவொரு நிகழ்விலும் இவர் சாதனைகளைத் தனதாக்கிக்கிக் கொள்வதுடன் தான் கல்விகற்ற பாடசாலைக்கும் புகழ் சேர்ப்பதால் பள்ளி வட்டாரத்திலும் முதன்மை மாணவராகத் திகழ்கின்றார். திருச்சிராப்பள்ளி மாநிலத்திற்கும் இவரால் பெருமைகள் கிடைத்துள்ளதோடுமட்டுமின்றி இவரால் நாமும் பெருமையடைகின்றோம்.
இவருடன் இவரைப்பற்றி எமது வவுனியா தமிழ் வலைத்தளத்தில் எழுதுவதையிட்டு நானும் பெரும் உவகை அடைகின்றேன்.