Exam
ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2008
கு்ம்பாபிசேக இருவெட்டு வெளியீடு
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுரர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் கடந்த 9-7-2008 அன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மண்டலாபிசேகம் நடைபெற்று 27-08-2008 அன்று சங்காபிசேகத்துடன் இனிதே நிறைவு பெற்றது.
இவ்நிகழ்வுகளின் சலனப்பட (video) தொகுப்பு இரு இருவட்டுக்களில் (DVD) வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சிவதத்துவ மலரும் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றைப் பெற விரும்புவோர் கீழ்கண்ட முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.
செயலாளர், அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுரர் ஆலயம், கோவில்குளம், வவுனியா, இலங்கை. தொ.பே. 0094-24-2222651, 2221685 மின்னஞ்சல் sivankovilvavuniya@gmail.com
புதன், 27 ஆகஸ்ட், 2008
பெறா மகள்
சனி, 23 ஆகஸ்ட், 2008
தமிழ் இணையதள வளர்ச்சி கருத்தரங்கம்
மதுரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கல்லூரி நாடார் மகாசன சங்கம் ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் இன்று 23.08.2008 காலை 10.30 மணியளவில் தமிழ் இணையத்தள வளர்ச்சி கருத்தரங்கம் இனிதே தொடங்கியது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை நூலகத்துறையைச்சேர்ந்த திருமதி/செல்வி.கவிதாதேவி அவர்கள் வரவேற்றார்கள். கல்லூரிப் பொருளாளர் திரு.மணிமாறன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்கள். கல்லூரி முதல்வர் சே.மகாத்மன் ராவ் அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வாழ்த்திப்பேசினார்கள். நூலகத்துறை நெறியாளர் முனைவர் குணசேகரன் அவர்கள் முகவுரை நிகழ்த்தினார்.
இது தொடர்பான மேலதிக விபரங்களை முனைவர்.மு.இளங்கோவன் அவர்களின் வலைப்பதிவில் பார்த்து பயனடையுங்கள்.
ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2008
சகோதரி கலாஜினியின் உள்ளக் குமுறல்கள்
யாசித்தவளே!
நீ துயிலும் போது இரவு சகாப்த்தத்தில்
நான் வருகிறேனா?
அந்த ஒட்டகை விழுந்த மனதில் என்னை
எண்ணிப் பாரடி.
விழிகளின் சபலத்தால் நாம் தவழ்ந்த
அந்த ஏகாந்த ராத்திரிகள் நினைவில் வரும்
துயில்களின் இரவில் இருகண்களும்
ஞாபகமூட்டிய கற்பனை சுவரொட்டிகள்
நினைவில் இருக்கின்றன.
என் விரல்கள் பட்ட உன் புருவம்
அதில் நனைந்த என் எண்ணச் சிறகுகள்
கண்ணுக் கெட்டியவரை கற்பனைகள்
சொட்டுதடி.
காதலே! நீ நிஜமானால்
என் விரல் தீ்ண்டியவளை என்னோடு
சேர்த்துவிடு.
என் தனிமைகள் என்னை சிந்திக்க
வைத்தன சிதறிய எண்ணத்தில்
எழுந்தவை இவை.
காதலியே நீ என்னை யோசிப்பாயா?!
காதலி
நான் நீயான போது தீயானாய்!
நீயான ”நான்” ஆனபோது தூவானமாய் நீயானாய்
நான் நானாக மாற முயல
நீ என் நெடுஞ்சாலையானாய்
பூவானமாய் நான் மாற
நிலவானாய் நீயாக என் கவிக்கு
முழுவானம் சுயசரிதையாய்
கவிமுகர்ந்தேன் என் கற்பனைக்கு
காதல் தாரகையாய் கவிதந்தாய் நீ தனியாக!
கலைஞானம் வடித்து பல கோவைகளில்
காதலியானாய் உன் பதில் உரையா!
காதலியானாய் என் மன பட்டம் பெற்று நீ!
நீ துயிலும் போது இரவு சகாப்த்தத்தில்
நான் வருகிறேனா?
அந்த ஒட்டகை விழுந்த மனதில் என்னை
எண்ணிப் பாரடி.
விழிகளின் சபலத்தால் நாம் தவழ்ந்த
அந்த ஏகாந்த ராத்திரிகள் நினைவில் வரும்
துயில்களின் இரவில் இருகண்களும்
ஞாபகமூட்டிய கற்பனை சுவரொட்டிகள்
நினைவில் இருக்கின்றன.
என் விரல்கள் பட்ட உன் புருவம்
அதில் நனைந்த என் எண்ணச் சிறகுகள்
கண்ணுக் கெட்டியவரை கற்பனைகள்
சொட்டுதடி.
காதலே! நீ நிஜமானால்
என் விரல் தீ்ண்டியவளை என்னோடு
சேர்த்துவிடு.
என் தனிமைகள் என்னை சிந்திக்க
வைத்தன சிதறிய எண்ணத்தில்
எழுந்தவை இவை.
காதலியே நீ என்னை யோசிப்பாயா?!
காதலி
நான் நீயான போது தீயானாய்!
நீயான ”நான்” ஆனபோது தூவானமாய் நீயானாய்
நான் நானாக மாற முயல
நீ என் நெடுஞ்சாலையானாய்
பூவானமாய் நான் மாற
நிலவானாய் நீயாக என் கவிக்கு
முழுவானம் சுயசரிதையாய்
கவிமுகர்ந்தேன் என் கற்பனைக்கு
காதல் தாரகையாய் கவிதந்தாய் நீ தனியாக!
கலைஞானம் வடித்து பல கோவைகளில்
காதலியானாய் உன் பதில் உரையா!
காதலியானாய் என் மன பட்டம் பெற்று நீ!
இளையோரின் கவிதைகள்
செல்வன்.தர்சனின் கவிதைகள் (வயது 15)
யாருக்காக???
அழிப்பதுவும் யுத்தமே ஒரு வகையில்
எம்மை காப்பதுவும் யுத்தமே!
இயற்கை தாயானவள் ஈன்றதா இவ்யுத்தம்
எழுவாள் கோரக்கரங்களாய்
கொன்று குவிப்பாள் மனித மலைகளாய்
ஏவுவாள் ஏவுகணைகளாய்
இறப்பதோ மானிட உயிர்களாய்
நான் பிறந்த புவியிலே
கூடப்பிறந்தனவோ சகோதரனாய்...
வெட்டுக்களும், குத்துக்களும்
வெள்ளமாய் இரத்தங்களும்
நான் பிறப்பில் காணவில்லை
மகிழ்ச்சியை-வாழ்வில்
காணவில்லை-உயிர்ச்சியை
மனித மரணங்கள் தான் மகிழ்ச்சி என்றால்....
சமாதானம் தான் யாருக்காக???
நட்பு
அவனியிலே பிறந்தோம்-அன்னை
மடியினிலே தவழ்ந்தோம்
கழனியில் வளர்ந்தோம்-தினம்
காற்றினிலே பறந்தோம்.
இடையினிலே வந்திடும்-நல்ல
இனிமையாய் அமைந்திடும்
பாடையிலே போகும் வரை-எம்
பார்வையிலே தங்கிவிடும்.
ஏழைக்கும் வாழ்க்கையிலே
நட்பே... எழுந்து நிற்கும் கோபுரமாகும்
காலை நிதம் என்றும்
காத்திடுவோம் நட்பினையே..
செல்வன்.பிரசாந்தின் கவிதைகள் (வயது 15)
இணையம்
கண் மூடி திறக்கும் முன்
கண்ணில் தகவலை காட்டும்
அட்சயபாத்திரம்-நீ
கடல்தாண்டி இருக்கும் எம் உறவுகளை
கண்முன்னே காட்டும் உற்ற நண்பன்-நீ
வலையாய் நீ இருந்து எமக்கு
வலைவிரிக்கும் செம்படவன் நீ!.
கல்வி
இப்பாரினிலே பிறந்த நாம்
பலர் பாராட்ட வாழ
பலர் போற்றபட நடக்க
வேண்டுமாம் கல்வி.
ஆழ்கடல் வற்றினாலும்
அலை ஓசை ஒலிக்காமல் நின்றாலும்
கல்விக் கடல் என்றுமே ஓயாத அலை
என்றும் காமதேனு.
செல்வந்தனுக்கு செல்வம் தான் பெரிது
கல்வி இல்லாவிட்டாலும் பணமுண்டு அவனிடம்
ஏழையான நமக்கு கல்விதான் உலகம்
கற்றால் தான் உணவுண்டு இல்லாவிடில் மரணமுண்டு.
செல்வன்.சேந்தனின் கவிதைகள் (வயது 15)
விளக்கு
எத்தனை நாளைக்குத் தான்
எரியப் போகுது இந்த விளக்கு
எத்தனை புயல்களிற்கு இந்த விளக்கு இலக்கு
மனிதா நீயும் விளக்கா???
அல்லது
அவ்விளக்கிற்கு நீயும் இலக்கா???
அழிப்பதுவும் யுத்தமே ஒரு வகையில்
எம்மை காப்பதுவும் யுத்தமே!
இயற்கை தாயானவள் ஈன்றதா இவ்யுத்தம்
எழுவாள் கோரக்கரங்களாய்
கொன்று குவிப்பாள் மனித மலைகளாய்
ஏவுவாள் ஏவுகணைகளாய்
இறப்பதோ மானிட உயிர்களாய்
நான் பிறந்த புவியிலே
கூடப்பிறந்தனவோ சகோதரனாய்...
வெட்டுக்களும், குத்துக்களும்
வெள்ளமாய் இரத்தங்களும்
நான் பிறப்பில் காணவில்லை
மகிழ்ச்சியை-வாழ்வில்
காணவில்லை-உயிர்ச்சியை
மனித மரணங்கள் தான் மகிழ்ச்சி என்றால்....
சமாதானம் தான் யாருக்காக???
நட்பு
அவனியிலே பிறந்தோம்-அன்னை
மடியினிலே தவழ்ந்தோம்
கழனியில் வளர்ந்தோம்-தினம்
காற்றினிலே பறந்தோம்.
இடையினிலே வந்திடும்-நல்ல
இனிமையாய் அமைந்திடும்
பாடையிலே போகும் வரை-எம்
பார்வையிலே தங்கிவிடும்.
ஏழைக்கும் வாழ்க்கையிலே
நட்பே... எழுந்து நிற்கும் கோபுரமாகும்
காலை நிதம் என்றும்
காத்திடுவோம் நட்பினையே..
செல்வன்.பிரசாந்தின் கவிதைகள் (வயது 15)
இணையம்
கண் மூடி திறக்கும் முன்
கண்ணில் தகவலை காட்டும்
அட்சயபாத்திரம்-நீ
கடல்தாண்டி இருக்கும் எம் உறவுகளை
கண்முன்னே காட்டும் உற்ற நண்பன்-நீ
வலையாய் நீ இருந்து எமக்கு
வலைவிரிக்கும் செம்படவன் நீ!.
கல்வி
இப்பாரினிலே பிறந்த நாம்
பலர் பாராட்ட வாழ
பலர் போற்றபட நடக்க
வேண்டுமாம் கல்வி.
ஆழ்கடல் வற்றினாலும்
அலை ஓசை ஒலிக்காமல் நின்றாலும்
கல்விக் கடல் என்றுமே ஓயாத அலை
என்றும் காமதேனு.
செல்வந்தனுக்கு செல்வம் தான் பெரிது
கல்வி இல்லாவிட்டாலும் பணமுண்டு அவனிடம்
ஏழையான நமக்கு கல்விதான் உலகம்
கற்றால் தான் உணவுண்டு இல்லாவிடில் மரணமுண்டு.
செல்வன்.சேந்தனின் கவிதைகள் (வயது 15)
விளக்கு
எத்தனை நாளைக்குத் தான்
எரியப் போகுது இந்த விளக்கு
எத்தனை புயல்களிற்கு இந்த விளக்கு இலக்கு
மனிதா நீயும் விளக்கா???
அல்லது
அவ்விளக்கிற்கு நீயும் இலக்கா???
சனி, 16 ஆகஸ்ட், 2008
சேந்தனின் கவிதை
எனது மாணவன் செல்வன்.க.சேந்தன்(வயது 15) அவர்களின் சுனாமி பற்றிய கவிதை ஆக்கத்தை இங்கே பதிவதில் நான் பெருமை கொள்கின்றேன்.
சுனாமி
இராட்சத நீர் நாக்குகளில்
பூச்சிகளாய்ப் மாட்டுபட்டனர்
நெய்தல் நில மக்கள்.
மனித நேயம்
வெளிப்பட்ட தருணம்
என்றனர் பலர்.
இயற்கையே
நீயும் தவளைப் பரிசோதனையில்
ஈடுபடத் தொடங்கி விட்டாயோ?
வேண்டாம்!
என் மக்களின் வாழ்வு
எவ்வளவோ விபரீதம் நிறைந்தது.
திங்கள், 11 ஆகஸ்ட், 2008
சியாம்குமாரின் கவிதை த் துளிகள்
எழுத்தாற்றலை வளர்க்க வேண்டும், தங்கள் ஆக்கங்கள் ஏதாவது ஒரு வகையில் அங்கீரிக்கப்படும் பொழுது அதை ஆக்கியோரின் உள்ளம் மகிழும் அதற்கு ஓர் உந்து சக்தியாக எனது வலைப்பதிவு அமைய வேண்டும் என்ற ஆவலில் இப்பதிவை தொடர்கின்றேன்.
“ இதன் முதல் முயற்சியாக எனது தகவல் தொழில் நுட்ப மாணவன் செல்வன். சியாம்குமாரின் கவிதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்”
நீ
என் மீது நடாத்துத்தும் நிழல் யுத்தம்
என் மீது நிறைவேற்ற நினைத்த
நம்பிக்கை இல்லா தீர்மானம்
என்னை கண்டதும் வெளிநடப்பு
என்னை பேசவிடாமல் கூச்சலிடும்- நீ
இலங்கை அரசின் இனவாத கட்சியா?
சிதைவு
அடர்ந்த புருவங்களும் -உன்
அகன்ற விழிகளும்
என்னை சிதைக்கின்றன.
மன்னிப்பு
நாம் செய்த தவறுக்காக
உயர்ந்த மனிதன் தரும் பரிசு
ஞாபகம்
நான் தந்த முத்தம்
நீ இட்ட சத்தம்
நாம் செய்த குறும்பு
என் இறுதி மூச்சு வரை
மறவாது.
ஒப்பந்தம்
சாட்சிகள் இன்றி
காட்சிகள் இன்றி
விழி சொன்ன உணர்விற்கு
கைசாத்தானது...
காதல் எனும் ஒப்பந்தம் .
புரியும் (காதல்)
உன் காதுகளை கேள்-என்
பற்களின் எண்ணிக்கை சொல்லும்
உன் கண்கங்களை கேள்-என்
உதடுகளின் தடிப்பை சொல்லும்
உன் உதடுகளை கேள் என்
முத்தத்தின் வலிமை சொல்லும்
என் உள்ளத்தை கேள் -நான்
கொண்ட காதல் புரியும்.
நம் தேசம்
ஓ... தமிழனே - உன்
இறுதி இலக்கை அடைய -ஏன்
மறுக்கிறாய்? மறக்கின்றாய்?
ஜாதி மதம் மறந்திடு-உன்
தேசத்திற்காய் நிமிர்ந்திடு
உன்னால் முடியும் அடைந்திடு
உன் இனம் படும் துன்பம் அறியுமா அந்நிய தேசம்?
உன் இனத்திற்கு -ஒரு முகவரி கொடு
உன் மொழிக்கு-ஒரு முகவரி இடு-
உன் இனத்தின் துன்பத்தை துடைக்காதே
உடைத்தெறி!!!
நாளை மலரும் நம் தேசம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)