Exam

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2008

இளையோரின் கவிதைகள்

செல்வன்.தர்சனின் கவிதைகள் (வயது 15)

யாருக்காக???
அழிப்பது
வும் யுத்தமே ஒரு வகையில்
எம்மை காப்பதுவும் யுத்தமே!

இயற்கை தாயானவள் ஈன்றதா இவ்யுத்தம்
எழுவாள் கோரக்கரங்களாய்
கொன்று குவிப்
பாள் மனித மலைகளாய்
ஏவுவாள் ஏவுகணைகளாய்

இறப்பதோ மானிட உயிர்களாய்


நான் பிறந்த புவியிலே
கூடப்பிறந்தனவோ சகோதரனாய்...
வெட்டுக்களும், குத்துக்
களும்
வெள்ளமாய் இரத்தங்களும்
நான் பிறப்பில் காணவில்லை
மகிழ்ச்சியை-வாழ்வில்
காணவில்லை-
உயிர்ச்சியை
மனித மரணங்கள் தான் மகிழ்ச்சி என்றால்....
சமாதானம் தான் யாருக்காக???


நட்பு

அவனியிலே பிறந்தோம்-அன்னை
மடியினிலே தவழ்ந்தோம்
கழனியில் வளர்ந்
தோம்-தினம்
காற்றினிலே பறந்தோம்.

இடையினிலே வந்திடும்-நல்ல
இனிமை
யாய் அமைந்திடும்
பாடையிலே போகும் வரை-
எம்
பார்வையிலே தங்கிவிடும்.

ஏழைக்கும் வாழ்க்கையிலே

நட்பே... எழுந்து நிற்கும் கோபுரமாகும்
காலை நிதம் என்றும்
காத்திடுவோம் நட்பினையே..

செல்வன்.பிரசாந்தின் கவிதைகள் (வயது 15)


இணையம்
கண் மூடி திறக்கும் முன்
கண்ணில் தகவலை காட்டும்
அட்சயபாத்திரம்-நீ
கடல்தாண்டி இருக்கும் எம் உறவுகளை
கண்முன்னே காட்டும் உற்ற நண்பன்-நீ
வலையாய் நீ இருந்து எமக்கு
வலைவிரிக்கும் செம்படவன் நீ!.






கல்வி
இப்பாரினிலே பிறந்த நாம்
பலர் பாராட்ட வாழ
பலர் போற்றபட நடக்க
வேண்டுமாம் கல்
வி.

ஆழ்கடல் வற்றினாலும்
அலை ஓசை ஒலிக்காமல் நின்றாலும்
கல்விக் கடல் என்று
மே ஓயாத அலை
என்றும் காமதேனு.

செல்வந்தனுக்கு செல்வம் தான் பெரிது
கல்வி இல்லாவிட்டாலும் பணமுண்டு அவனிடம்
ஏழையான நமக்கு கல்விதான் உலகம்
கற்றால் தான் உணவுண்டு இல்லாவிடில் மரணமுண்டு.


செல்வன்.சேந்தனின்
கவிதைகள் (வயது 15)



விளக்கு
எத்தனை நாளைக்குத் தான்
எரியப் போகுது இந்த விளக்கு
எத்தனை புயல்களிற்கு இந்த விளக்கு இலக்கு
மனிதா நீயும் விளக்கா???
அல்லது
அவ்விளக்கிற்கு நீயும் இலக்கா???








































8 கருத்துகள்:

Gowsy Seelan சொன்னது…

சகோதரன் சேந்தன் அவர்களே!
இடம் உள்ள வரை இடம் பிடித்துள்ள கவிதைகளில் ஒன்று இது.
என்றும் என் மனம் கவரும் உம் கவிதைகள்.

கெளஷி சீலன்-கனடா

S.Lankeswaran சொன்னது…

மிக்க நன்றி கெளஷி சீலன் அவர்களே

ம.கஜதீபன் சொன்னது…

என்னப்பா இது? என்னால் நம்பவே முடியவில்லை. என் மனம் என்னை வெட்கித்தலை குனிய வைக்கின்றது. வவுனியாவில் இளையவர்கள் மனதில் இப்படியொரு கவித்திறனா? ஆளுக்காள் போட்டியிட்டு வார்த்தைகளினால் விளையாடுகின்றார்களே????? "இலங்கேஸ்வரன் பேசாமல் இவர்கள் அனைவரினதும் கவிதைத்தொகுப்புக்களை ஒரு புத்தகமாக்கி விடுங்கள்!" வவுனியாவில் கடும் வரவேற்ப்பைப்பெறும். " அந்த அளவிற்கு கவித்துவம் மிக்க வரிகள் ஜயா அவை.....!

ம.கஜதீபன் சொன்னது…

இவர்கள் அருளக சிறார்களா? திரு.இலங்கேஸ்வரன் அவர்களே...? அல்லது தங்களிடம் கணனி பயிலும் பிரதேச வாசிகளா?

நீங்கள் கூகிள் பிளாக்கரினை பயன்படுத்துவதினை விட
www.000webhost.com என்ற தளத்திற்கு ஒரு முறை சென்று முயற்சித்துப்பாருங்கள். அங்கே இருக்கிறது சங்கதி. உங்களிற்கு இலவச முகவரி .tk(free domain name) என்பதில் முடிவடையக்கூடியதாக வேண்டுமெனின் www.dot.tk இந்த தளத்திற்கு விரையுங்கள். "தமிழ் வளர்ப்போம். தரணியெங்கும் தமிழின் பெருமை சொல்வோம்."

S.Lankeswaran சொன்னது…

மிக்க நன்றி திரு.கஜதீபன் தங்களின் ஆலேசனைக்கும். பாராட்டுதலுக்கும்.
நீங்கள் எழுதிய பாராட்டுதல்களை எனது மாணவர்களுக்கு காட்னினேன். அவர்களுக்கு எல்லை இல்லா சந்தோசம்.
அவர்கள் சிறுவர்கள் தானே எல்லையில்லா ஆனந்தம் வேறு. எனது மாணவர்கள்.

Gowsy Seelan சொன்னது…

அன்பின் பிரசாந்
நீர் சொல்வது சரி ஏழைகளுக்கு கல்வி தான் மிக பெரிய சொத்து.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

மாணவர்களின் படைப்புகளை வெளியிட்டு ஊக்கப்படுத்தும் தங்களைப் பாராட்டுகிறேன்.
மு.இளங்கோவன்
புதுச்சேரி

ilakkiyam சொன்னது…

nandraga irukkirathu ungal muyarchi. congratulations. keep it up.

from murugan selvan
tuticorin tamilnadu