Exam

வெள்ளி, 25 டிசம்பர், 2009

முத்துத்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக

மழைக்கால இன்றைய மாலை நேரத்தில் சற்று ஓய்வாக இருந்த போது தூரத்தில் எங்கோ ஒலித்த “முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி...” பாடல் என்னுள் எனது இளமை கால நினைவுகளை சற்று அசைபோட வைத்தது.

நாங்கள் உடன் பிறந்தவர்கள் 4 பேர் அண்ணா 2 பேர், 1 தங்கை. எங்களை கண்டிப்புடன் நல்வழியில் நடப்பதில் பெரியவர் அக்கரை செலுத்தினார். சிறியவர் எங்கள் கல்விவளர்ச்சியில் அக்கறை காட்டினார்.

இன்று நாங்கள் அனைவரும் திருமண பந்தத்தில் இணைந்து ஒவ்வொரு திசைநோக்கி பயணிக்கின்றோம். பெரியவர் வலைகுடா நாடொன்றிலும். சிறியவர் மற்றும் தங்கை வவுனியாவிலும். நான் திருகோணமலையிலும் வாழ்க்கையை தொடர்ந்தாலும் எங்கள் இதயங்கள் என்றும் ஒன்று பட்டே உள்ளன.
தந்தையின் மறைவிற்கு பின் என்னையையும் தங்கையையும் தாயாருடன் சேர்ந்து பாசமாக வளர்த்ததில் எங்கள் அண்ணன்மாரின் பங்கு மகத்தானது.

அப்பாடலின் ஆரம்ப வரியான “முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக ” என்ற வரிகளை திரு.கண்டசாலா அவர்களின் குரலினில் கேட்கும் போது கண்களின் ஓரங்களில் நீர் துளிகள்...

“சின்னத் தம்பி கடைசித்தம்பி செல்லமாய் வளர்ந்த பிள்ளை...” என்ற வரிகள் என் அண்ணன்மார் பாடுவது போன்ற ஓர் உணர்வினை ஏற்படுத்த மனதை பிரிவின் வேதனை வாட்டிவிட்டது.

என்னுள் மலரும் நினைவுகளை ஏற்படுத்திய அப்பாடலை நான் முழுமையாக இணையத்தில் பலமுறை இப்பொழுது கேட்டுக் கொண்டிருக்கின்றேன். நீங்களும் கேட்டிட இவ்விணைப்பிற்கு சென்றிடுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA


கருத்துகள் இல்லை: