Exam

ஞாயிறு, 30 மார்ச், 2008

தினக்குரல் நாளேட்டிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

எமது வவுனியா தமிழ் வலைப்பதிவை இவ்வாரம் (30-03-2008) அன்றைய ஞாயிறு தினக்குரலில் "வாரம் ஒரு வலைப்பதிவு பகுதியில்" வெளியிட்டமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.


எம்மை போன்ற வளர்ந்து வரும் இளைய தலைமுறையை நல்ல வழியில் வளர்த்து மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி வரும் தினக்குரல் நிறுவனத்தாருக்கு நான் என்றும் நன்றிக் கடன்பட்டுள்ளேன்.


"வாரம் ஒரு வலைப்பதிவின்" ஆசிரியரான திரு.க.தே.தாசன் எமது வலைப்பதிவை பற்றி மிகவும் திறமையாக எடுத்தியம்பியுள்ளார். அவரின் எழுத்தாற்றலுக்கு நன்றிகள் பல.

எனது ஏனைய வலைப்பதிவுகள்
itvav.blogspot.com
sivankovil.blogspot.com
shanmugha.blogpsot.com

செவ்வாய், 11 மார்ச், 2008

கருங்குருவிக்கு தன்மகனின் உடையை கொடுத்த என் தங்கை


எங்கள் வீட்டில் உடைகளை காயப் போட்டால் கருங்குருவிகள் அதில் கூடு கட்டி விடுகின்றன. இதனை பார்த்த என் தங்கை அவற்றை பிரிக்க மனமில்லாமல் தன் மகனின் உடையில் ஒன்றை அப்படியோ விட்டுவிட்டார். இப்பொழுது அதில் குருவியாரும் கூடுகட்டி குடித்தனமும் நடாத்தி குஞ்சும் பொரித்து விட்டார். எனக்கு இச்செயலைப் பார்த்தவுடன் "முல்லைக்கு தேர் கொடுத்த பாரி"யின் கதை தான் ஞாபகம் வந்தது.


திங்கள், 28 ஜனவரி, 2008

ஆபாச கூடங்களாக மாறும் இணைய சேவை மையங்கள்

இன்று எமது பிரதேசத்தில் உள்ள இளைஞர்களின் சொர்க்கபுரியாக இருப்பது பிரவுசிங் சென்ரர்கள் (மன்னிக்கவும சரியான தமிழ் பதம் தெரியவில்லை) தான். இங்கு போகும் இளைய சமூகத்தினர்களில் பலர் செல்லும் தளங்கள் ஆபாச தளங்களாகவே உள்ளது என்பது மனவேதனையை ஏற்படுத்துகின்றது. சில பிரவுசிங் சென்ரர்களில் ஆபாச வீடியோ கோப்புக்களை உரிமையாளர்களே பதிந்தும் வைத்துள்ளனர். அறிவையம் விஞ்ஞானத்தின் தகவல் தொடர்பாடல் வளர்சியை நாம் உபயோகிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஆனால் இச்சீர்கேடுகள் நம்மை நமது கலாச்சாரத்திற்கு அப்பால் இட்டுச் சென்று விடுமோ என்று அச்சமாக உள்ளது. வெளிநாடுகளில் இதுவெல்லாம் சகஜம் என்று சப்புக்கட்டு கட்டுபவர்கள் ஒன்றை நினைவிற் கொள்ள வேண்டும். அங்கு எல்லாம் சகஜம் தானே! எதையும் தெரிந்து கொள்ள வேண்டிய வயதில் தெரிந்து கொள்ளும் விதத்தில் தெரிந்தால் அது சுவராசியமாக இருக்கும். இன்றை விவாகரத்துக்களுக்கு வித்திடுவதில் இதுவும் ஒரு காரணமாக உள்ளது. ஆபாச திரைப்படங்களை ஒழிக்க நினைக்கும் பலர் ஏன் இவ்மையங்களை கண்டு கொள்வதில்லை.
இதற்கான தீர்வு தான் என்ன?
  1. இணைய சேவை மையங்களில் கட்டாயம் இணைய வடி கட்டி மென் பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
  2. சிறுவர்களை தனிமையாக அனுமதிக்க கூடாது.
  3. 4-4 அடைப்புக்களை கட்டாயம் நீக்க வேண்டும்.

செய்யுமா அரசு ????

புதன், 2 ஜனவரி, 2008

தொலைக்காட்சி நாடகங்களும் வவுனியா மக்களும்

இன்று வவுனியாவில் பெரும்பாலான பிள்ளைகளின் கல்வி அறிவு பின்தங்கிச் செல்ல (மற்ற பிரதேசங்களிலும் தான்) தொலைக்காட்சி நாடகங்களும் ஒரு காரணம்.

முக்கியமாக அவ் நாடகங்களில் பழிவாங்களும், சூழ்ச்சியுமே அதிகமாக உள்ளது.

எமது பிரதேசத்தில் முன்பெல்லாம் மாலை நேரங்களில் முற்றங்களில் பெரியோர்கள் இருந்து சிறுபிள்ளைகளுக்கு கதை சொல்வார்கள் தங்கள் அன்றாட குடும்ப செய்திகளை பரிமாறுவார்கள். இப்பொழுது மாலை 6 மணிக்கெல்லாம் சன் ரீவியில் ஒளிபரப்பாகும் (எங்கள் ஏரியாவில் சன் ரீவி, கலைஞர் ரீவி, விஜய் ரீவி எல்லாம் இலவச ஒளிபரப்பு வேறு) அழுகை நாடகங்கள் தான்!

இவற்றை பார்க்கும் மக்களின் மனநிலை எவ்வாறு இருக்கும். சன் ரீவியில் தான் இப்படி என்றால் கலைஞர் ரீவி அதற்கு போட்டியாக இன்றும் அதிகமான பழிவாங்கள், சோக நாடகங்களை ஒளிபரப்புகின்றது. சரி விஜய் ரீவி பக்கம் திரும்பினால் அதில் நிலமை பரவாயில்லை. ஆனால் கனாக் காணும் காலங்களைப் பார்த்து விட்டு நமது பி்ள்ளைகள் அது போல மாறிவிடுவார்களோ என்ற பயம். சரி நம்நாட்டு தொலைக்காட்சிகளில் என்ன போகின்றது எனப் பார்க்கலாம் என்று திருப்பினால்?????? அதில் தென்னிந்திய செய்மதி தொலைக்காட்சி (சன், விஜய்...) களில் இருந்து கடன்வாங்கிய அதே நாடகங்கள். என்று மாறும் இந்த நாடக மேகம்.

யுனிக்கோட்டில் தமிழில் நேரடியாக எழுத இயலாதாத?

யுனிக்கோடை உபயோகித்து தமிழில் நேரடியாக ரைப் செய்ய இயலாதா?
ஏன் நாம் கொன்வர்ட்டர்களை உபயோகிக்க வேண்டும்.

யுனிக்கோடின் தமிழ் லே அவுட் இருந்தா தாருங்கள்.

சனி, 8 செப்டம்பர், 2007

"ர்" இவ்வெழுத்து தமிழ் மொழியி்ல் உண்டா?

"ர" போட்டு குற்று வைப்பதுதானே சரியான "ர்" ஆகும். (ர அடித்து குற்று வைத்தாலும் இப்படித்தான் வருகின்றது) . துனை எழுத்தான"ா" இதில் குற்றை வைத்தாலும் அது ர் என்று தானே வருகின்றது. இதை சரி செய்வது எப்படி?

புதன், 5 செப்டம்பர், 2007

ஒலிப்பதிவை இணைப்பது எப்படி?

நண்பர்களே!
எனது வலைப்பதிவில் MP3 பாடல்களை இணைப்பது எப்படி என்று சொல்லுங்கள்.

வவுனியா மஹாவிஷ்ணு கோவில் தேர்திருவிழா





வவுனியா கோவில்குளம் மஹாவிஷ்ணு ஆலய தேர்த்திருவிழா நிகழ்வு நேற்று காலை நடைபெற்றது.

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2007

கேள்வி மன்னன்

எனது மாணவர்களில் ஒருவர்। ஆனால் இவர் கேட்கும் கேள்விகளுக்கு என்னால் பதில் அளிக்க இயலவில்லை। இவரின் அறிவுப்பசிக்கு விருந்தளியுங்கள்। இவரின் மின்னஞ்சல் முகவரி:

thanutsmailto:thanuts_5555@yahoo.com