Exam

வியாழன், 27 நவம்பர், 2008

கண்ணீர் அஞ்சலி

இந்திரன் என்று அழைக்கப்படும் இராசலிங்கம் ரவீந்திரன் (பால் சேகரிப்பாளர்) அவர்கள் 25-11-2008 அன்று அகால மரணமடைந்தார்.

அன்னார் இராசலிங்கம், மகேஸ்வரி தம்பதிகளின் புதல்வனும், பிறேமலதாவின் கணவரும், கிரிதரன்-புதுக்குளம் மகாவித்தியாலயம், விதுசன்-ஈச்சங்குளம் மகாவித்தியாலயம், ரியாந்தினி-ஈச்சங்குளம் மகாவித்தியாலயம் ஆகியோரின் தந்தையும் ஆவார்.

அன்னாரி ஈமக்கிரியைகள் 28-11-2008 அன்று ஈச்சங்குளத்தில் நடைபெறும். என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் பிரிவில் துயருற்று இருக்கும் குடும்பத்தாருடன் வவுனியா தமிழ் வலைப்பதிவு சார்பாக நாமும் துயரில் பங்கு கொள்வோமாக.

ஞாயிறு, 16 நவம்பர், 2008

என் ஸ்கூட்டியின் புலம்பல்

என் அன்பிற்கினிய உரிமையாளராகிய திருவாளர் ச.இலங்கேஸ்வரன் அவர்களுக்கு முதற்கண் வணக்கம். நான் உங்கள் ஸ்கூட்டி உந்துருளி கதைக்கின்றேன். இன்று எனது ஆதங்கத்தை உங்களிடம் கொட்டித்தீர்க்க வேண்டும் என்ற ஆவலில் எழுதுகின்றேன்.

என்னை நீங்கள் வாங்கி இன்றுடன் ஓராண்டுகள் நிறைவடைகின்றது. உங்களின் கடுமையான ஓட்டத்திற்கு தாக்குப்பிடித்து இந்த ஓர் ஆண்டில் விபத்துக்கள் ஏதும் ஏற்படாமல் ஏன் சிறுகாயங்கள் கூட இன்றி என்னை நீங்கள் பாவித்ததே பெரிய விடயம் தான்.

ஆனால் கடந்த காலத்தில் உங்களிடம் இருந்த எனது உறவினர்கள் ஆகிய CD Downம் Hero honda Splander ம் பட்ட காயங்களையும் சோக வரலாறுகளையும் அவர்களை சாலையில் சந்திக்கும் போது நான் அறிவேன்.

அன்பானவரே! நான் மகளிர் பயனிப்பதற்கு ஏற்ற வகையிலே தயாரிக்கப்பட்டவன். நீங்கள் என்னை முரட்டுத்தனமாக கையாளும் போது எனக்கு வலிக்கத்தானே செய்கின்றது என்பதை தாங்கள் அறிவீர்களா? எனது மடியில் உங்களின் கணிணியை வைத்து நித்தம் கொண்டு செல்லும் போதும், எனது வயிற்றுக்குள் suntel CDM தொலைபேசியையும் வைத்து என்னை சுமைதாங்கி ஆக்கி விட்டீர்களே!

அது சரி உங்களுக்கு பாதையில் உள்ள மேடு பள்ளங்கள் தெரிவதில்லையா? 60 மைல் வேகத்தில் நீங்கள் செல்லும் போது எனது சொப்பட் சோபர்கள் படும் அவஸ்தையை நீங்கள் சற்று புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் படுத்தும் பாடு போதாதென்று உங்கள் கல்வி நிலையப் பெண்களுக்கும் கொடுத்து என்னை பாடாய்ப்படுத்துகின்றீர்கள். அந்தப் பேய்கள் பழகுவதற்கு நான் தானா கிடைத்தேன். அதிலும் அவர்கள் டபுல்ஸ் வேறு. உங்களுக்கு முன்பு அவர்கள் மெதுவாக என்னை செலுத்தி தங்கள் தலை மறைந்ததும் அவர்கள் என்னைப்படுத்தும் பாடு இருக்கின்றதே அப்பப்பா நீங்களே பராயில்லை தலைவா!

அன்பானவரே! இனிமேலாவது என்னை கொஞ்சம் துடையுங்கள். மென்மையாகக் கையாளுங்கள். நீங்கள் என்னை கையாளும் விதத்தில் தான், நான் உங்களுடன் அதிக காலம் வாழ்வேன் என்று கூறி விடைபெறுகின்றேன்.


தங்களின்
ஸ்கூட்டி பப் +

வெள்ளி, 14 நவம்பர், 2008

இலவசமாக அமெரிக்க பிரஜை ஆக உங்களுக்கு விருப்பமா?

இன்று பல இலட்சங்களை செலவழித்து மேற்கத்திய நாடுகளுக்கு செல்லக் காத்திருக்கும் எம்மவர்களே! உங்களுக்கு இலவசமாக அமெரிக்க செல்ல அதுவும் நிரந்தர குடியுரிமையுடன் செல்ல விருப்பமா? இதே இந்த அமெரிக்க அரசின் லொட்டரியில் வரும் 1-டிசம்பர்-2008 ற்கு முன்பு பதிவு செய்து அதிர்ஸ்டசாலியாகுங்கள்.

உங்கள் நிழற்படத்தை மட்டும் கவனமாக எடுத்து இதில் இணையுங்கள். இவ்விடயத்தில் யாருக்கம் எது வித பணமும் நீங்கள் கொடுக்கத் தேவையில்லை.

முகவரி http://www.dvlottery.state.gov/

திங்கள், 10 நவம்பர், 2008

பாதையில் நடந்து செல்வோருக்கும் அனுமதி அட்டை

இன்றைக்கு நான் ரொம்பநாளாக எழுத நினைத்த கருத்தினை எழுத உள்ளேன். உலகம் முழுவதும் பார்த்தீர்களேயானால் வாகனம் ஓட்டுபவர்கள் அனுமதி அட்டை (லைசென்ஸ்) எடுக்க வேண்டும். ஏன் விமானம் ஓட்டுபவர்கள் கூட விமான அதற்கான அனுமதி அட்டை வைத்திருக்க வேண்டும். ஆனால் நாம் யாரும் இந்தப் பாதையில் நடந்து செல்பவர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவர்களும் வாகனங்களைப்பற்றியோ விதிமுறைகளைப் பற்றியோ கவலைப்படுவதில்லை (மற்ற நாடுகளைப் பற்றி எனக்குத் தெரியாது எம் நாட்டைப்பற்றி மட்டுமே எனது வவுனியாவின் நிலையைப்பற்றி மட்டுமே நான் இங்கு குறிப்பிடுகின்றேன்).

இங்கு ஆடு மாடுகள் கூட சற்று வரும் வாகனங்களைப் பார்த்து சற்று நின்று தான் செல்கின்றன. ஆனால் பாதசாரிகள் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. மஞ்சள் கோடுகள் எதற்கு வரைந்துள்ளார்கள் என்பதைப்பற்றியும் சிந்தனையில்லை. இன்று வவுனியா பிரதேசத்தில் அதிகமான விபத்துக்கள் இந்தப் பாதசாரிகளின் கவனக்குறைவாளும் விதிமுறைகளை மீறுவதாலும் தான் நடைபெறுகின்றது.

இதை தவிர்க்க முதலில் பாதசாரிகளுக்கு சாலை விதிமுறைகளைப்பற்றி வகுப்புகள் எடுக்கப்பட்டு விழிப்புணர்ச்சி ஊட்டப்பட்டு தேர்வு வைத்து அனுமதி அட்டை வளங்கப்பட வேண்டும். அனுமதி அட்டை உள்ளவர்கள் மட்டுமே தெருக்களில் நடமாட முடியும். மற்றவர்கள் கழுத்தில் ஓர் L board ஐ மாட்டிக் கொண்டு திரிய வேண்டும். அனுமதி பெற்றவர்கள் சரியாக விதிமுறைகளைப் பின்பற்றாவிற்றால் அவர்களின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட வேண்டும்.

வீதியில் ஓர் விபத்து நடந்தால் பாய்ந்தடித்து ஓடி வரும் போக்குவரத்து பொலீசாரே, இவற்றை சற்று கருத்தில் எடுத்துக் கொள்ளுங்களேன். வீதி விபத்தை தடுப்பீர்.

(இன்று காலையில் கணவன் மற்றும் நிறைமாத கர்ப்பினிப் பெண் ஆகியோர் பயனித்த உந்துருளியொன்றின் குறுக்கே ஓடிய ஓர் இளம் பெண்ணினால் விபத்து ஏற்பட்டு அந்த நிறைமாத கர்ப்பினிப் பெண் துடித்த துடிப்பினை பார்த்து, மனவேதனையில் இந்தப் பதிவினை நான் எழுதினே்)

கால் நடையாக செல்வோரே நீங்கள் கால் நடையாகத்தான் செல்கின்றீர்கள், ஆனால் நீங்கள் “கால்நடை” இல்லையே???????? மனிதர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

ஞாயிறு, 2 நவம்பர், 2008

மருமகப்பிள்ளையின் குறும்பு


எப்படி இருக்கு என்ற ஆக்சன்? (அம்மா சாப்பாடு ஊட்ட தேடுறா அது தான் இங்க இப்படி பதுங்கிட்டன். please யாரும் காட்டிக் கொடுத்திடாதீங்க.)

அட விடுங்கம்மா. நானும் மாமாவும் ரோயலுக்கு போய் பிரைட் ரைஸ் சாப்பிடப்போறம். இப்ப போய் காரியத்த கெடுக்கிறீயே! (மாமு இதையுமா நிழற்படம் எடுத்துட்ட?, மாமு உனக்கு யாரு டிஜிட்டல் கேமரா வாங்கித்தந்தது????????????? என்ற இமெஜ் என்ன ஆகிறது. என்ற கேல் பிரன்ஸ்ட்ட காட்டிடாதப்பு, )

மான் வேசம் போட்டா புல்லு தின்னனுமாம். இல்லாட்டி இலங்கேஸ் மாமா நிழற்படம் எடுக்க மாட்டாராம். அது தான்... எப்படி இருக்கு என்ற நடிப்பு
இது தான் 32 பல்லும் தெரிய சிரிக்கிறதோ? எப்படிப்பு இருக்கு என்னோட சிரிப்பு???
நான் சிரிச்சா வவுனியாவே அதிரனும் இல்ல.
நான் பெரியவனான பிறகு வியாரம் செய்யனும் இல்ல ? அது தான் இப்பவே பயிற்சி எடுக்க ஆரம்பிச்சிட்டன்.