Exam

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

இலங்கை பதிவர் சந்திப்பு

இந்திய வலைப்பதிவர்களின் பதிவுகளில் சென்னையில் வலைப்பதிவர் சந்திப்பு, கோவையில், சேலத்தில் என்று பதிவுகள் வரும் போதெல்லாம் என்னுள் ஓர் ஏக்கப் பெருமூச்சு எழும். ஏன் இலங்கையில் ஓர் இலங்கை பதிவர்களுக்கான சந்திப்பை நாம் நடாத்தவில்லை என்று.காலச்சூழல் பொருளாதார நிலை இரண்டின் தாக்கங்களால் என்னால் அவற்றை மனதில் மட்டுமே நினைத்துப் பார்க்க முடிந்தது. இந்நிலையில் பதிவர் திரு.வந்தியதேவன் அவர்களிடம் இருந்து ஓர் மின்னஞ்சல் இலங்கையில் பதிவர் சந்திப்பு என்று. என்னுள் உற்சாகம் பீறிட்டுள்ளது. வரும் 23ஆம் திகதியாம் கொழும்பில் நிட்சயம் கலந்து கொள்ள வேண்டும்.

இப்பதிவின் மூலம் எனது மாணவர்களும் எனது ஏனைய நண்பர்களும் இச்சந்திப்பில் கலந்து சிறப்பிக்க வேண்டும் என அன்புடன் அழைக்கின்றேன்.


காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை .
நேரம் : காலை 9 மணி.
இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்,
இல.7, 57வது ஒழுங்கை (ருத்ரா மாவத்தையின் பின்புறம்), கொழும்பு 06.


நோக்கங்கள் :
இலங்கைத் தமிழ் வலைப்பதிவாளர்களிடம் அறிமுகத்தையும் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளுதல்.

புதிய பதிவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குதல்

இலங்கைப் பதிவாளர்களின் திறமைகளை இணையத்தைவிட்டு வெளிக்கொணர முயற்சி செயதல்.

பதிவாளர்களிடையேயான கருத்துரைகள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல்.

பதிவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அல்லது தொழில்நுட்ப சந்தேகங்களுக்கான வழிமுறைகளை ஆராய்தல்

இன்னும் பல‌..

வலைப்பதிவாளர்கள், புதிதாக வலைப்பதிபவர்கள், வலையுலக வாசகர்கள், பின்னூட்டமிடுபவர்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

மேலதிக விளக்கங்களுக்கும் தகவல்களுக்கும் பின்வருவோரைத் தொடர்பு கொள்ளவும்.


லோஷன் : arvloshan@gmail.com
புல்லட் : bullettheblogger@gmail.com
வந்தி : vanthidevan@gmail.com
ஆதிரை : caskaran@gmail.com

முழுமையான நிகழ்ச்சி நிரல் அடுத்த வாரம் பிரசுரிக்கப்படும்.

இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்.


பிற்குறிப்பு : மின்னஞ்சலினூடாக பலரை நாம் தொடர்புகொண்டோம் சிலரின் மின்னஞ்சல் முகவரிகள் எமக்கு கிடைக்கவில்லை ஆகவே தயவு செய்து மின்னஞ்சலில் இதனைப் பற்றிய தகவல்கள் கிடைக்காதவர்கள் எந்தவித தயக்கமின்றி எம்மைத் தொடர்பு கொள்ளவும்.

ஏதாவது கருத்துக்கள்,ஆட்சேபணைகள்,ஆலோசனைகள் இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.

உங்களுக்கு தெரிந்த வலைப்பதிவாளர்கள், ஆர்வமுள்ளவர்களையும் அழைக்கவும்; உங்கள் வருகை பற்றி உறுதிப் படுத்தவும்.

யாரையும் தவறவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாயுள்ளோம்.. யாராவது ஆரம்பிக்க வேண்டும் என்பதால் தான் நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.. எம்முடன் இணைந்து முன்னெடுக்க ஆர்வமுள்ளோர் வரவேற்கப்படுகிறார்கள்.

இருவாரங்கள் தாராளமாக இருப்பதால் இலங்கை முழுவதும் இருந்து பங்கேற்பை எதிர்பார்க்கிறோம்.

உங்கள் வலைத்தளங்களிலும் இதனைப் பிரசுரித்து வருகைகளை அதிகரிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

செவ்வாய், 14 ஜூலை, 2009

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

20-07-2009 அன்று தனது முதலாவது பிறந்தநாளை கனடாவில் கொண்டாடும் செல்வி.சாரபி அவர்களுக்கு வவுனியா தமிழ் வலைப்பதிவு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.


ஞாயிறு, 12 ஜூலை, 2009

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

10-07-2009 அன்று தனது 5வது பிறந்தநாளை திருகோணமலை ஐயனார்கேனியில் வெகுவிமர்சையாக கொண்டாடிய செல்வி.சிறி.சதுர்சிகா அவர்களுக்கு எமது வவுனியா தமிழ் வலைப்பதிவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.


சனி, 14 பிப்ரவரி, 2009

காதலர் தினம்

உண்மையான அன்புள்ளவர்களுக்கு எந்தநாளும் காதலர் தினமே!

புதன், 14 ஜனவரி, 2009

வவுனியாவில் தைத்திருநாள்-2009

அனைவருக்கும் என் இனிய தமிழர் புதுவருட தைத்திருநாள் வாழ்த்துக்கள்.
எங்கள் வவுனியாவிலும் பொங்கல் நிகழ்வுகள் கோலாகலமாக(??!!) கொண்டாடப்பட்டது. இது தமிழர் திருநாள் அல்லவா? அதனால் நாங்கள் இதை கொண்டாடினோம்.இது எங்கட வீட்டின் தயாரிப்பு

நல்லப்பிள்ளையாய் நான்

அம்மா பொங்கல் முடிச்சிட்டாங்க இனி சாப்பாடுதான்.
தாயில்லாமல் நானில்லை. இந் நன்நாளில் தாயிடம் ஆசீர்வாதம்.
அம்மா அண்ணா அன்னி, மருமகன், மற்றும் பக்கத்து வீட்டு சிறுவர்களுடன்

இவர் இந்தப் பொங்கலுக்கு புதுவரவு. அண்ணாட மகன் பிறந்து 45 நாட்கள்.
அம்மா அதிகாலையில தன்ற வேலையை ஆரம்பிச்சிட்டாங்க.
தங்கை வீட்டுக்காரர் கடையில பொங்க வெளிக்கிட்டுட்டார்.
அதிகாலையில் பொங்கலுக்கான வேலைகள் ஆரம்பி்ச்சாச்சி.


எங்கள் வீட்டிற்கு முன்பு உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுரர் ஆலயத்தின் ஆதரவற்ற பெண்களுக்கான சிறுவர் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வின் நிழற்படங்கள்.

சனி, 10 ஜனவரி, 2009

தகவல் தொழில்நுட்ப பரீட்சை முடிவுகள்

National Certificate in Information and Communication Technology பயிற்சி நெறியில் 2008 ல் பயின்ற மாணவர்களின் பரீட்சை முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. http://www.vtasl.slt.lk/nitc/index.htm சென்று பாருங்கள்.

இப்பயிற்சி வகுப்பில் வவுனியாவில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் என்னிடம் படித்த மாணவர்களுக்கு என்னுடைய இனிய வாழ்த்துக்களையும் வரும் 15-01-2008 ஆம் திகதி தேர்வு எழுதவுள்ள தற்போது என்னிடம் பயிலும் மாணவர்கள் நல்ல முறையில் தேர்வினை எழுதி வெற்றி பெறவும் வாழ்த்துகின்றேன்.

”கடலுக்குப் பயந்தவன் கரையினில் நின்றான், முயன்றவன் அக்கடலினைக் கடந்தான், பயந்தவன் தனக்கே பகையானான், முயன்றவன் உலகிற்கு ஒளியாவான்” என்ற கவியரசின் வைரவாக்கியங்களுக்கு ஏற்ப முயன்றிடுவீர்! முனைந்திடுவீர்!! வென்றிடுவீர்!!!

ஞாயிறு, 4 ஜனவரி, 2009

பெற்றோரின் வரட்டு கௌரவத்திற்கு பிள்ளைகளா கிடைத்தார்கள்?

இயந்திரதனமான இன்றைய உலகில் நாம் நமது பிள்ளைகளையும் நமது வரட்டு கௌரவத்திற்கு இரையாக்கி விடுகின்றோமே என்ற அச்சமே எனக்கு ஏற்படுகின்றது. இன்று 3 வயது நிரம்பியவுடன் பிள்ளைகளை இந்தத் பெற்றோர் படுத்தும் பாடு இருக்கின்றதே. அதைப்பற்றி தான் இன்று எழுத உள்ளேன்.

கற்றல் என்பது ஒவ்வொரு பிள்ளையின் உளவளர்ச்சி சார்ந்த ஒன்று. எல்லாப்பிள்ளைகளும் ஒரே அளவில் அறிவினை உள்வாங்குவதில்லை. ஆனால் அதை எத்தனைப் பெற்றோர்கள் சரிவரப் புரிந்து கொள்கின்றார்கள்? இங்கு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் வகுப்பில் சரியாக மதிப்பெண் எடுக்கவில்லை என்பதால் அந்தப் பிள்ளைகளை படுத்தும் பாடு இருக்கின்றதே???? உண்மையில் பாவம் அந்தப் பிஞ்சுகள். பாடசாலையில் வைத்தே சில பெற்றோர்கள் மற்ற பிள்ளைகளுக்கு முன்பு பிள்ளைகளை அடிப்பதும் ஏசுவதும். அந்தச் சின்னஞ்சிறு மழலைகளுக்கு என்ன தான் தெரியும். பயம் கலந்த முகத்துடன் அவர்கள் போகும் போது மனது வலிக்கின்றது.

அதிலும் ஆண்டு 5 ற்கான புலமைப் பரிசில் தேர்வு இருக்கின்றதே! அதற்கு ஆண்டு 3ல் இருந்தே தயார்படுத்த தொடங்கி விடுகின்றார்கள். ஆண்டு 3ல் இருந்தே அந்தப்பிள்ளைகள் இயந்திரமாகிவிடுகின்றார்கள் இல்லை இல்லை இயந்திரமாக்கி விடுகின்றார்கள் பெற்றோர் என்பதே உண்மை.

நான் சமீபத்தில் சில பெற்றோரிடம் கதைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர்கள் என்னிடம் கூறிய கருத்துரைகள் என்னை வேதனையின் விளிம்பிற்கு கொண்டு சென்றது.
அதாவது அவர்கள் சொல்லும் கருத்து ”தன்ர பிள்ளை மார்க் எடுத்தால் தனக்கு மதிப்பாம், அப்பதான் நாளைக்கு மற்றவையளிட்ட தாங்கள் பெருமையடித்துக் கொள்ளலாமாம், இது தங்கட கௌரவப் பிரச்சினையாம்”.

அட அறிவிழி பெற்றோரோ! உங்கட வரட்டு கௌரவத்திற்கும் பிள்ளையிட படிப்பிற்கும் என்ன தொடர்பு? நீங்கள் பீற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்கு ஏன் அந்த மழலைகளை கொடுமைப்படுத்துகின்றீர்கள்?

அதிலும் பாருங்கள் இந்தச் சனி,ஞாயிறுகளில் காலை 6-7 வரை யோகாசன வகுப்பாம், 7-10 பாடசாலை பாடங்கள் தொடர்பான வகுப்பாம் 10.15 - 12 வரை கணினி வகுப்பாம், 12-1.30 வரை அபாக்கஸ் வகுப்பாம்? பிறகு பி.ப 3-4.30 நடன வகுப்பாம் 4.30- 6 மணி வரை ஆங்கில வகுப்பாம், அதற்குப் பிறகு 6 மணிக்கு களைத்து தோய்த்து போகும் அந்தப் பிஞ்சுகள் பாடசாலையிலும் இந்த வகுப்புகளிலும் கொடுக்கப்படும் வீட்டுப்பாடங்களை வேறு அதற்குப் பிறகு தான் செய்ய வேண்டுமாம். இது தவிர திங்கள் முதல் வெள்ளி வரை பாடசாலை விட்டு வந்தால் அதன் பிறகு வேறு டியுசன் வகுப்புக்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் நான் மேற் சொன்ன நிலை தான் நிழவுகின்றது. அந்தப் பிள்ளைகளின் தாயார் உந்துருளியில் அழைத்து செல்லும் போதே அந்தப்பிள்ளைகள் காலைச் சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டு செல்லும் நிலையை நான் காண்கின்றேன்.

பிள்ளைகள் டியுசன் சென்று படித்தால் தான் படிக்க இயலும் என்றால் எதற்கு பாடசாலைகள்?
பேசாமல் பாடசாலைகளை பூட்டிவிட்டு டியுசன்களை மட்டுமே நாம் நடத்தலாமே?

பெற்றோர்களே ”என்ற பிள்ளைதான் வகுப்பில 1st என்று நீங்கள் பெருமையடித்துக் கொள்ள அந்தச் சின்னஞ் சிறு மழலைகளை இயந்திர பொம்மைகளாக்கி விடாதீர்கள்.” ”இன்று நமது உலகிற்கு ஒளியைத் தந்த திரு.தாமஸ் அல்வா எடிசன் பாடசாலையில் படிப்பதற்கே தகுதியற்றவர் என்று விரட்டி அடிக்கப்பட்டவர் தான்.” ”பாடசாலையிலும் பல்கலைக்கழகத்திலும் முதலிடம் பெற்ற எத்தனையோ பேர் இன்று இருக்கும் இடம் கூட தெரியாமல் உள்ளார்கள். ஆனால் கடைசி வரிசையில் இருந்த எத்தனையோ பேர் இன்று புகழ் பெற்ற மனிதர்களாக உள்ளது உலகறிந்த உண்மை”

உங்களின் பகட்டு ஆசைக்கு அந்தப் பிள்ளைகளை பலியாக்கிவிடாதீ்ர்

புதன், 31 டிசம்பர், 2008

இனிதாய் இருக்கட்டும்

இனிதாய் இருக்கட்டும்
இனி வரும் காலம்...
நலமாய் இருக்கட்டும்
நாளை வரும் நேரம்...
புதியாய் இருக்கட்டும்
புதிய ஆண்டு...

அனவைருக்கும் என் உளமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வியாழன், 27 நவம்பர், 2008

கண்ணீர் அஞ்சலி

இந்திரன் என்று அழைக்கப்படும் இராசலிங்கம் ரவீந்திரன் (பால் சேகரிப்பாளர்) அவர்கள் 25-11-2008 அன்று அகால மரணமடைந்தார்.

அன்னார் இராசலிங்கம், மகேஸ்வரி தம்பதிகளின் புதல்வனும், பிறேமலதாவின் கணவரும், கிரிதரன்-புதுக்குளம் மகாவித்தியாலயம், விதுசன்-ஈச்சங்குளம் மகாவித்தியாலயம், ரியாந்தினி-ஈச்சங்குளம் மகாவித்தியாலயம் ஆகியோரின் தந்தையும் ஆவார்.

அன்னாரி ஈமக்கிரியைகள் 28-11-2008 அன்று ஈச்சங்குளத்தில் நடைபெறும். என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் பிரிவில் துயருற்று இருக்கும் குடும்பத்தாருடன் வவுனியா தமிழ் வலைப்பதிவு சார்பாக நாமும் துயரில் பங்கு கொள்வோமாக.