Exam

திங்கள், 27 அக்டோபர், 2008

வவுனியாவின் கிராமப்புறங்கள்

வவுனியா சிதம்பரபுரம், ஆசிகுளம், கல்நாட்டினன்குளம், சமளன்குளம் ஆகிய பிரதேசங்களின் சில பகுதிகளை நேற்று நிழற்படம் எடுத்தேன். அவற்றினை தங்களோடு பகிர்ந்து கொள்ள நினைக்கின்றேன்... தங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்கைளையும் இட்டுச் செல்லுங்கள்... அவை எனக்கு இத்தளத்தினை வளர்க்க உதவும்.



எங்கட வவுனியாவில இப்படியான எழில்கொஞ்சும் இடங்களும் இருக்கு. ஆனா என்ன பலருக்கு தெரியிரதில்லை.


செப்பனிடப்படாத பாதை. சுமார் 1 கி.மீற்றர் அடிவாரத்தில் உள்ளது. இதன் வழியாகத்தான் மலையேற வேண்டும். (ஆனால் பாருங்கள் இந்தப்பாதை இப்படி இருந்தால் தான் பழமை மாறாமல் இருக்கும் என்பது எனது கருத்து)

இது மலையின் மீது புதிதாக அமைக்கப்பட்டு வரும் கோயில். மிகவும் பொருளாதாரத்தாலும், பொருட்களை மேலே எடுத்துச் செல்வதில் உள்ள சிரமத்தினாலும் சற்று மெதுவாகவே வேலைகள் நடைபெற்று வருகின்றது.

இவர் தான் நிழற்படம் எடுக்க உதவிய உதவியாளர். எனக்கு மகன்முறை. 10ஆம் ஆண்டு படிக்கிறார். அடிக்கடி தலையில் குட்டும் வாங்குவார் ஏதாவது மொக்கை தனமாகச் சொல்லிப்போட்டு. (ஆனா நல்ல மண்டக்காரன்)
அப்பாடா மலையேறிய களைப்பு, இரவு சற்று தூங்கலாம் என்றால் எனது தகவல் தொழில் நுட்ப மாணவர்கள் 2 மணி 3 மணிக்கெல்லாம் தொலைபேசியில் அழைத்து சந்தேகம் கேட்கின்றார்கள். (அதிலும் வலைப்பதிவாளர் மேனனின் தொல்லை தாங்க முடியவில்லை) அது தான் என்னையும் அறியாமல் சற்று கண்ணயர்ந்துவிட்டேன்.
ம் மழைக்காலம் ஆரம்பிச்சாச்சி இனி தோட்ட வேலைகளைப்பார்க்கனும் தானே?

இது தான் கல்வாரிமலையின்அடிவாரம். இது ஒரு கற்கலால் ஆனா ஒரு சிறு குன்று. கிறித்துவர்களின் புனித தலம். நல
கல்வாரி மலையில் உள்ள அறிவிப்புப் பலகை. கட்டாயம் இது தேவைதான். புனிதமான இடங்களை தங்கள் களியாட்டத்திற்கு பயன்படுத்துவோர் உணரவேண்டும். கல்வாரி மலையின் கீழ் உள்ள அலுவலகம் இப்பொழுது தான் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த இடம் தான் மருதங்குளம் இது சமளன்குளத்திற்கு அடுத்துள்ள பகுதி. விவசாயபூமி.

1 கருத்து:

சோழர் தலைவன் சொன்னது…

மிக நல்லதொரு முயற்சி வவுனியா என்றாலே ஒரு சாராரின் கருத்து வேறு மாதிரி இருக்கின்றது அவர்களின் கருத்தை இந்த படங்கள் மாற்றி விடும் எங்கள் மண்ணின் பசுமையினை,அழகினை அவர்கள் தெரிந்துகொள்ளட்டும்.