Exam

வெள்ளி, 31 அக்டோபர், 2008

அன்று திரையரங்காக இன்று உணவகமாக ரோயல்

இது தான் எங்கட ஊரில முதன் முதலாக தொடங்கப்பட்ட ஒரு நல்ல வெளிநாட்டு (இந்திய) உணவு வகைகளைக் கொண்ட உணவகம். இது முன்பு ரோயல் திரையரங்கம் என்று அழைக்கப்பட்ட திரையரங்கம். நாங்க சின்னப்பிள்ளையா இருக்கும் போது இங்க நியுந்திரா, வசந்தி, ஸ்ரீமுருகன், ரோயல் திரையரங்குகள் இருந்தன. இப்போது வசந்தி மட்டுமே திரையரங்காக உள்ளது. நியுந்திரா திரையரங்கு இடிக்கப்பட்டு பாழடைந்து உள்ளது. ஸ்ரீமுருகன் இருந்த இடத்தில் ஓர் புதிய அடுக்குமாடிக் கட்டிடம் கட்டப்பட்டுவிட்டது. மிஞ்சிய ரோயல் திரையரங்கும் இன்று மண்டபமா மாற்றப்பட்டு கீழே நிழற்படத்தில் உள்ளதுவாறு காட்சி அளிக்கின்றது. இதற்கு பின்பகுதியில் இயற்கையான சூழலில் அமைந்துள்ளது தான் ரோயல் ரெஸ்ரோரன்ட் என்பது.
எனக்கு இந்த உணவகத்திற்கு போகும் போதெல்லாம் 1980ற்கும் 1986ற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நான் என் பெற்றோருடன் பார்த்த திரைப்படங்களின் காட்சிகள் ஞாபகத்திற்கு வரும். இன்னமும் காளி திரைப்படத்தில் ரஜனி ஒருவனின் முதுகில் காளி என்று போத்த ஓடினால் எழுதிய காட்சி மனத்திரையில் உள்ளது. சற்று சிறுவயது நினைவுகளை அசைப்போட்டபடியே சூடான உணவினையும் அசைப்போட்டு சாப்பிட்டு வருவேன்.

இங்கே எனக்கு பிடித்த உணவு பிரைட் ரைஸ் தான். ஆனாலும் திருச்சியில் (தமிழகத்தில்) உள்ள பனானா லீப்புக்கு ஈடாகாது. அதற்கு முக்கிய காரணம் அங்கிருக்கும் மூலப்பொருட்கள் இங்கு கிடைப்பதில்லை. அதைவிட நாம் மல்லி இழைகளை உணவில் சேர்ப்பதில்லை. இவர்தான் ரோயல் கார்டனில் சாப்பிடுபவர்களிடம் உணவு வரி வசூலிப்பவர். முதலில் தனியாக வந்தார். பிறகு ஒரு பாய் பிரண்ட். இப்பொழுது குடும்பம் குட்டி என்று பயங்கர பிசி ஆகி விட்டார். இவரின் தொல்லை சற்று தாங்க முடியவில்லை தான்.


திருச்சியில் (இந்தியாவில்) இருந்து வந்து இங்கு பணிபுரிந்தவர்களில் எஞ்சியிருக்கும் ஒரே ஒரு நபர். மற்றவர்கள் தாயகம் சென்று விட்டனர். இவர் அதிகம் கதைக்க மாட்டார். தன் வேலையை சரியாக செய்து முடிப்பார். திருச்சி பெரிய மிளகுப்பாறையைச் சேர்ந்தவர்.


இவர் தான் ரோயல் கார்டினின் காவலாளி. வயதானாலும் மிடுக்கு குறையாதவர். நமது வாகனங்களை சரியாக நிறுத்தாவிட்டால் உடனே இவரிடம் இருந்து குரல் ஒலிக்கும்.

இன்னும் பல உணவகங்கள் வந்துள்ளன. அவையும் நன்றாக உள்ளன. குறிப்பாக தங்கும் வசதியுடன் நெல்லி , சுவர்க்கா, புலேஸ் பல்மோரல்.... என்று ...

5 கருத்துகள்:

மாயா சொன்னது…

நாங்கள் முந்தி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரும்போது வவுனியா நன்பர்களுடன் மாலை நெரங்களில் கொத்துரொட்டி சாப்பிட்டிருக்கிறோம்

அருமை

S.Lankeswaran சொன்னது…

மிக்க நன்றி தங்களின் கருத்துரைக்கு

பெயரில்லா சொன்னது…

மிகவும் சந்தோசமாக உள்ளது உங்கள் பணிக்கு. இருந்தாலும் உங்கள் கெமரா ரொம்ப பாவம் பண்ணியிருக்கு போல.தயவு செய்து கொஞ்சம் ஓய்வு கொடுங்கள். அதுவும் பாவம் தானே?

S.Lankeswaran சொன்னது…

நன்றி......உங்கட கையில அந்த செல்லிட தொலைபேசி படுற பாட்ட விடவா சகோதரி பிரமிளா அவர்களே????

சோழர் தலைவன் சொன்னது…

"சற்று சிறுவயது நினைவுகளை அசைப்போட்டபடியே"
உண்மைதான் ஆசிரியரே ரோயல் தியேட்டரில் நான் தரம் 5 படிக்கும் போது Jurassic Park பார்த்த அனுபவம் இன்னும் எனக்கு நன்றாக நினைவிருக்கின்றது. படம் ஆரம்பிக்கும் போது முன் வரிசையில் இருந்தேன் படம் முடியும் போது நான் பின்வரிசைக்கு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வந்து விட்டேன். றோயலுக்கு போகும் போது எனக்கு அந்த ஞாபகங்கள் மீண்டும் வந்து போகும். வவுனியாவில் இருந்தா நல்ல தியேட்டர்களில் ஒன்று மூடியது சற்று வருத்தம்தான்.